Tuesday, February 22, 2011

ஓட்ஸ் குக்கீஸ்



தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்

மைதா 1 கப்

பட்டைத்தூள் 1 டீஸ்பூன்

(cinnammon powder)

சர்க்கரை 1 கப்

வெண்ணைய் 1/2 கப்

ஆப்பசோடா 1 டீஸ்பூன்

Flax seeds 1 டேபிள்ஸ்பூன்


                                                             FLAX   SEED

செய்முறை:

Flax seed ஐ மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதா மாவு,ஓட்ஸ் பட்டைத்தூள்,,ஆப்பசோடா நான்கையும் போட்டு நன்கு கலக்கவேண்டும்.

இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையையும் வெண்ணையையும் கலக்கவேண்டும்.

அதனுடன் அரைத்த flax seed விழுதினை சேர்த்து பிசையவேண்டும்.

சர்க்கரை,வெண்ணைய்,flax seed விழுது கலவையோடு மைதா மாவு,ஓட்ஸ் மிக்சரை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

சப்பாத்தி மாவு மாதிரி வந்தபின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டவேண்டும்.

Ovan ஐ 350 யில் preheat செய்து cooking time 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.


சுவையான ஓட்ஸ் குக்கீஸ் ரெடி.

6 comments:

மதுரை சரவணன் said...

குக்கீஸ் பகிர்வுக்கு நண்றீ.. இந்த வாரம் இது தான் செய்து பழ்கப்போறேன்..வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி மதுரை சரவணன்.

GEETHA ACHAL said...

அருமையான சத்தான குக்கிஸ்...

Kanchana Radhakrishnan said...

Thanks Geetha.

ஸாதிகா said...

அட..ஓட்ஸில் கூட குக்கீஸ் செய்து அசத்தறீங்க!!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...