அப்பம் 1
தேவையானவை:
பச்சரிசி 1 கப்
வெல்லம் 1/2 கப் (பொடித்தது)\
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
வாழைப்பழம் 1
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் நைசாக அரைக்கவேண்டும்.
அதனுடன் பொடித்த வெல்லத்தையும் வாழைப்பழத்தையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
இட்லி மாவு பதம் இருக்கவேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவேண்டும்.
வாணலியில் எண்ணைய் வைத்து நன்கு காய்ந்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்து ஒரு கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி
இருபக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
---------------------
அப்பம் 2.
தேவையானவை:
மைதா மாவு 1கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
வெல்லம் 3/4 கப் (பொடித்தது)
வாழைப்பழம்1
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
செய்முறை:
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் பத்து நிமிடங்கள் வைக்க கரைந்துவிடும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மைதாமாவு,அரிசிமாவு,வாழைப்பழம்,ஏலக்காய் தூள் சேர்த்து
தண்ணீர் விடாமல் பிசைய வேண்டும்.
கரைத்த வெல்லத்தை இதனுடன் சேர்த்து பிசைய வேண்டும்.கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவு இட்லி மாவு பதம் இருக்கவேண்டும்.
முதல் வகையில் கூறியபடி எண்ணெயில் மாவை ஊற்றி எடுக்கவேண்டும்.
-----------------------------
அப்பம் 3
தேவையானவை:
கோதுமைமாவு 1 கப்
அரிசிமாவு 1 மேசைக்கரண்டி
வெல்லம் 3/4 கப் (பொடித்தது)
வாழைப்பழம்1
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
செய்முறை:
அப்பம் 2 ல் கூறியபடி மாவை கலந்து (மைதா மாவுக்கு பதில் கோதுமை மாவு) எண்ணெயில் ஊற்றி எடுக்கவேண்டும்.
13 comments:
இதே முறையைக் குழிப்பணியாரமாகவும் செய்யப் பயன்படுத்தலாம்தானே, குறிப்பாக டயட்டிலிருப்பவர்கள்:)?
கோதுமைமாவில் செய்ததில்லை. நல்ல குறிப்புகள். நன்றி.
மூன்று வகை அப்பம் அருமை.
எனக்கு ஊருக்குப் போனால் மட்டுமே அப்பம் கிடைக்கும்.வாழைப்பழம் ஏலக்காய்பொடி போடுவதாய்த் தெரியவில்லை.பால் விட்டு தளதளவென்று அம்மா சுட்டுத் தரும் அப்பம் வாசம் வருது !
// ராமலக்ஷ்மி said...
இதே முறையைக் குழிப்பணியாரமாகவும் செய்யப் பயன்படுத்தலாம்தானே, குறிப்பாக டயட்டிலிருப்பவர்கள்:)?//
குழிப்பணியாரமாகவும் செய்யலாம்.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
//
ஹேமா said...
எனக்கு ஊருக்குப் போனால் மட்டுமே அப்பம் கிடைக்கும்.வாழைப்பழம் ஏலக்காய்பொடி போடுவதாய்த் தெரியவில்லை.பால் விட்டு தளதளவென்று அம்மா சுட்டுத் தரும் அப்பம் வாசம் வருது !
நீங்கள் சொல்வது 'ஆப்பம் ' என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி ஹேமா.
மூன்று வகையாக அப்பம்,இருக்கும் பொருள் கொண்டு எது வசதியோ செய்து கொள்வது மாதிரியான பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி asiya omar.
மூன்றையும் செய்து பார்க்க சொல்கிறேன்.
திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி சகோதரி!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
love the 3 types of appam!!
nice.. padikkumpothe naakkil echil oorugirathu... thanks to share.... please read my tamil kavithaigal in www.rishvan.com
Thanks for coming Rishvan.
வருகைக்கு நன்றி menaga
Post a Comment