தேவையானவை:
இட்லி துண்டுகள் 20
எண்ணைய் தேவையானது
---------
அரைக்க:
தேங்காய் துருவல் 1கப்
தனியா 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
---------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
----------
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை வறுத்து சிறிது தண்ணீர் விட்டு விழுதுபோல அரைத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட தட்டை எடுத்துக்கொண்டு அதில் இட்லி துண்டுகள்,அரைத்த விழுது,சிறிது எண்ணைய் மூன்றையும் சேர்த்து நன்கு பிசிறவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பிசறி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறமாக வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
சாதாரண இட்லி சாப்பிடுவதை விட இதை ஒரு ஸ்நாக்காக நினைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
14 comments:
இட்லியை உதிர்த்து உப்புமாவாக செய்வதுண்டு. வித்தியாசமாக இப்படியும் செய்திடலாமே. நல்ல குறிப்பு. நன்றி.
வருகைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.
தகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி நண்டு @நொரண்டு -ஈரோடு.
இட்லி,பாண் மிஞ்சினால் எங்கட வீட்லயும் இப்பிடி நடக்கும்.ஆனால் அரைத்துப்போடுறதைக் காணவில்லையே !
வித்தியாசமான கார கறி
வருகைக்கும் நன்றி ஹேமா.
வருகைக்கு நன்றி Jaleela.
nice recipe!!
வருகைக்கு நன்றி Menaga.
சூப்பர்.செய்திடுவோம்.
அட.. வித்தியாசமா இருக்கே..
உப்புமா, இட்லிபஜ்ஜின்னு செஞ்சதுண்டு. இதையும் ஒரு நாள் செஞ்சுடலாம்.
வருகைக்கும் நன்றி asiya omar.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.
Post a Comment