தேவையானவை:
காலிஃப்ளவர் 1
வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
மசாலா தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு எண்ணெய் தேவையானது
--------
தாளிக்க:
கடுக் 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
---------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் காலிஃப்ளவரை வைத்து அதன் மேல் வென்னீர் இரண்டு கப் காலிஃப்ளவர் மூழ்கும் வரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து
பத்து நிமிடம் மூடி வைக்கவேண்டும். பின்னர் தனித்தனி பூக்களாக எடுத்து வைக்கவேண்டும்.
வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து தாளிக்க வேண்டியவைகளை எண்ணெயில் தாளிக்கவேண்டும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி அதனுடன் தக்காளியையும் பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவேண்டும்.
அதனுடன் காலிஃப்ளவரை மஞ்சள் தூளுடன் சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
காலிஃப்ளவர் வெந்ததும் உப்பு சேர்த்து இஞ்சி பூண்டு விழுது,மசாலா தூள்,சாம்பார் பொடி சேர்த்து வதக்கவேண்டும்.
அடுப்பிலிருந்து இறக்கியபின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.
11 comments:
Thanks Srividhya Ravikumar.
சாம்பார் பொடி சேர்க்கும்போது தனி சுவையே. நல்ல குறிப்பு. நன்றி.
குறிப்பிற்கு மிக்க நன்றி சகோதரி...
// ராமலக்ஷ்மி said...
சாம்பார் பொடி சேர்க்கும்போது தனி சுவையே. நல்ல குறிப்பு. நன்றி.//
ஆம்.உண்மை தான்.சாம்பார் பொடி தனி சுவை தான்.வருகைகக்கு நன்றி ராமலஷ்மி.
செஞ்சு பாத்திடறேன்.
மிக அருமை காஞ்சனா
நல்ல குறிப்பு.
//திண்டுக்கல் தனபாலன் said...
குறிப்பிற்கு மிக்க நன்றி சகோதரி//
நன்றி திண்டுக்கல் தனபாலன்.
//பழனி.கந்தசாமி said...
செஞ்சு பாத்திடறேன்.//
செய்துபாருங்கள்.சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி பழனி.கந்தசாமி.
// Jaleela Kamal said...
மிக அருமை காஞ்சனா/
வருகைக்கு நன்றி Jaleela.
// கோவை2தில்லி said...
நல்ல குறிப்பு.//
Thanks கோவை2தில்லி.
Post a Comment