Thursday, January 17, 2013

பார்லி உப்புமா கொழுக்கட்டை




தேவையானவை:
பார்லி 1 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது                      பார்லி
                                                   
-------
அரைக்க:
துவரம்பருப்பு 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைபருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
மிளகாய் வற்றல் 2
-------
செய்முறை:

பார்லியை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெயில் தாளிக்க வேண்டியவைகளை தாளித்து 2 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
(ஒரு கப் உடைத்த பார்லி ரவாவுக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம்)
அரைத்த விழுதையும் தேவையான உப்பையும் அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
தண்ணீர் கொதித்தவுடன் பார்லி ரவையை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கிளறவேண்டும்.
தேவையானால் சிறிது எண்ணெய் சேர்த்து கிளறலாம்.
ஆறினவுடன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்க
சுவையான பார்லி உப்புமா கொழுக்கட்டை ரெடி.

தேங்காய் சட்னி,தக்காளி சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

5 comments:

விச்சு said...

பார்லி உப்புமா கொழுக்கட்டை.. இப்பவே சாப்பிடனும்போல தோணுது.

Kanchana Radhakrishnan said...

Thanks விச்சு.

ADHI VENKAT said...

பார்லி கொழுக்கட்டை பிரமாதமா இருக்கு.

Jaleela Kamal said...

saththaaa kozukkaddai anrumai

Kanchana Radhakrishnan said...

Thanks Jaleela.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...