தேவையானவை:
சன்னா 1 கப்
பாசுமதி அரிசி 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
புதினா இலைகள் 10
உப்பு,எண்ணெய் தேவையானது
--------
அரைக்க:
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பற்கள்
துருவிய தேங்காய் 1/4 கப்
கரம் மசாலா 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/4 கப் (ஆய்ந்தது)
------
தாளிக்க:
பட்டை 1 துண்டு
கிராம்பு 2
ஏலக்காய் 2
சீரகம் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:
கொண்டக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் குக்கரில் மூன்று விசில் வரும் வரை வைத்து எடுக்கவேண்டும்.
பாசுமதி அரிசியை ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் வைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
தக்காளி வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
அரைக்கக்கொடுத்துள்ளவைகளை விழுதாக அரைக்கவேண்டும்.
---------
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
பின்னர் தக்காளி,புதினா இலைகள் சேர்த்து வதக்கவேண்டும்,
வேகவைத்த கொண்டக்கடலை,அரைத்த விழுது தேவையான உப்பு சேர்த்து வதக்கி ஊறவைத்த அரிசியை வடிகட்டி (தண்ணீரை எடுத்துவைக்கவேண்டும்.) இதனுடன் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்ட வேண்டும்.
எல்லாவற்றையும் ele.cooker ல் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து வைக்கவேண்டும்.
சுவையான சன்னா பிரியாணி ரெடி.
17 comments:
சூப்பர்.ருசி செய்முறையிலேயே தெரிகிறது.
looks delicious :)
wow.. looks so so delicious... feels so tempting...
PANEER BURFI
Show Your Styles to the World - Series
VIRUNTHU UNNA VAANGA
அருமையான சன்னா பிரியாணி .
நன்றி.
சுவையான சன்னா பிரியாணி. பகிர்வுக்கு நன்றிங்க.
கடைசியில் எல்லாவற்றையும் ele.cooker ல் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து வைக்கவேண்டும், என்றால் எப்படி என்று தெளிவாக சொல்லவும். அதாவது எண்ணையில் வதக்கியதும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட வேண்டும். பிறகு தண்ணீர் வற்றும் வரை விட வேண்டுமா?
சாதாரண குக்கரில் வைக்க முடியாத?
// Asiya Omar said...
சூப்பர்.ருசி செய்முறையிலேயே தெரிகிறது.//
வருகைக்கு நன்றி Asiya Omar.
// Aruna Manikandan said...
looks delicious :)
Thanks Aruna.
// Vijayalakshmi Dharmaraj said...
wow.. looks so so delicious... feels so tempting...//
Thanks Vijayalakshmi.
//கோமதி அரசு said...
அருமையான சன்னா பிரியாணி .
நன்றி.//
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
//ன்னா பிரியாணி. பகிர்வுக்கு நன்றிங்க.
January 22, 2013 at 11:09 PM
Desingh said...
கடைசியில் எல்லாவற்றையும் ele.cooker ல் ஊறவைத்த தண்ணீருடன் சேர்த்து வைக்கவேண்டும், என்றால் எப்படி என்று தெளிவாக சொல்லவும். அதாவது எண்ணையில் வதக்கியதும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட வேண்டும். பிறகு தண்ணீர் வற்றும் வரை விட வேண்டுமா?//
அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் வடிகட்டி (வடிகட்டிய தண்ணீரை தனியே எடுத்து வைக்கவேண்டும்)
அரிசியை வாணலியில் வைத்து
எண்ணெய் விடாமல் இரண்டு நிமிடம் வறுக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சன்னா,வெங்காயம்,தக்காளி அரைத்த விழுது கலவை,
வறுத்த அரிசி,வடிகட்டிய தண்ணீர் எல்லாவற்றையும் சேர்த்து குக்கரில் வைக்கலாம் (3 விசில்)
அல்லது ele cooker ல் வைக்கலாம்.
இப்பொழுது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வருகைக்கு நன்றி Desingh.
ஆஹா சன்னாவிலும் பிரியாணியா?சூப்பர்!
கோவை2தில்லி said...
சுவையான சன்னா பிரியாணி. பகிர்வுக்கு நன்றிங்க.//
Thanks Aadhi.
// ஸாதிகா said...
ஆஹா சன்னாவிலும் பிரியாணியா?சூப்பர்!//
செய்து பாருங்கள். சூப்பராக இருக்கும்.வருகைக்கு நன்றி ஸாதிகா.
புதுமையான குறிப்பு. அருமை.
.வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
Post a Comment