Sunday, March 10, 2013

வாழைத்தண்டு பொரியல்



தேவையானவை:
வாழைத்தண்டு 1
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
-----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------
செய்முறை:


வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர்
சேர்த்து வேகவைக்கவும். சிறிது வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.
நன்றாக வெந்ததும் வடிகட்டவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய வாழைத்தண்டு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து இதனுடன் சேர்க்கவும்.
சுவையான வாழைத்தண்டு பொரியல் ரெடி.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வீட்டில் வாரம் இருமுறை உண்டு...

நன்றி சகோதரி...

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு.

கோமதி அரசு said...

நான் தண்ணீர் அளவாய் வைத்து வேக வைத்துவிடுவேன் வடித்தால் சத்து போய்விடும் என்று.
கண்டிப்பாய் தண்ணீரை வடிக்க வேண்டுமா?

பொட்டுகடலை பொடி போட்டு செய்தது இல்லை செய்துப் பார்க்கிறேன்.
நன்றி.

Kanchana Radhakrishnan said...

// திண்டுக்கல் தனபாலன் said...
வீட்டில் வாரம் இருமுறை உண்டு...

நன்றி சகோதரி..//


வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
நல்ல குறிப்பு.//
Thanks ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

// கோமதி அரசு said...
நான் தண்ணீர் அளவாய் வைத்து வேக வைத்துவிடுவேன் வடித்தால் சத்து போய்விடும் என்று.
கண்டிப்பாய் தண்ணீரை வடிக்க வேண்டுமா?

பொட்டுகடலை பொடி போட்டு செய்தது இல்லை செய்துப் பார்க்கிறேன்.
நன்றி.//

அரை கப் தண்ணீர் தான் சொல்லியிருக்கேன்.தண்ணீர் அவ்வளவு மீராது.அப்படியே இருந்தாலும் அதில் சிறிது மிளகுத் தூள் சேர்த்து சூப்பாக குடிக்கலாம், எல்லா காய்கறிகளையும் நான் இப்ப்டி செய்வதுண்டு.
பொட்டுக்கடலை சேர்ப்பதால் தேங்காயின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.வருகைக்கு நன்றி கோமதி அரசு

ADHI VENKAT said...

சுவையான குறிப்பு. நானும் இதுபோல் செய்வதுண்டு. பொட்டுக்கடலை சேர்த்ததில்லை.

தண்ணீர் அளவாய் தெளித்து மூடி போட்டு வேக வைப்பேன்.

இராஜராஜேஸ்வரி said...

வாழைத்தண்டு வேகவைத்த நீருடன் சிறிது மிளகுத்தூளும் , சற்றே நீளமாக நறுக்கிய சில தண்டுகளும் சேர்த்து சூப்பாக பறிமாறுவதுண்டு ..

2 இன் 1..

Kanchana Radhakrishnan said...

//
கோவை2தில்லி said...
சுவையான குறிப்பு. நானும் இதுபோல் செய்வதுண்டு. பொட்டுக்கடலை சேர்த்ததில்லை.

தண்ணீர் அளவாய் தெளித்து மூடி போட்டு வேக வைப்பேன்.//

வருகைக்கு நன்றி
கோவை2தில்லி .

Kanchana Radhakrishnan said...


// இராஜராஜேஸ்வரி said...
வாழைத்தண்டு வேகவைத்த நீருடன் சிறிது மிளகுத்தூளும் , சற்றே நீளமாக நறுக்கிய சில தண்டுகளும் சேர்த்து சூப்பாக பறிமாறுவதுண்டு ..//


நீங்கள் சொல்வதுபோல் செய்வதுண்டு.வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...