தேவையானவை:
புளி நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
அரைக்க:
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து
சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
வேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
11 comments:
மிகவும் ரசமான பதிவு.
பாராட்டுக்கள்.
//வேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.//
பயனுள்ள மருத்துவத்தகவல். மகிழ்ச்சி.
எங்கள் வீட்டு வாசல் வேம்புவும்
நன்றாக பூ விடத் துவங்கிவிட்டது
சரியான சமயத்தில் அருமையான பகிர்வு
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
மருத்துவத் தகவலுடன் நல்லதொரு குறிப்பு... நன்றி...
//வை.கோபாலகிருஷ்ணன் said...
மிகவும் ரசமான பதிவு.
பாராட்டுக்கள்.//
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வை.கோபாலகிருஷ்ணன் Sir.
//
Ramani S said...
எங்கள் வீட்டு வாசல் வேம்புவும்
நன்றாக பூ விடத் துவங்கிவிட்டது
சரியான சமயத்தில் அருமையான பகிர்வு
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி//
வருகைக்கு நன்றி Ramani S.Sir.
சித்திரை முதல் தேதி மட்டும் வேப்பம் பூ ரசம் வைப்பேன்.
அடிகடி வைத்தால் நல்லது தான்.
நல்ல பதிவு.
நீங்கள் சொல்வது போல் வயிற்றுப்புண்ணை ஆற்றும் உடம்பு நல்லது.
//திண்டுக்கல் தனபாலன் said...
மருத்துவத் தகவலுடன் நல்லதொரு குறிப்பு... நன்றி...//
Thanks திண்டுக்கல் தனபாலன்.
// கோமதி அரசு said...
சித்திரை முதல் தேதி மட்டும் வேப்பம் பூ ரசம் வைப்பேன்.
அடிகடி வைத்தால் நல்லது தான்.
நல்ல பதிவு.//
நன்றி கோமதி அரசு.
மருத்துவத் தகவலுடன் ரசம் பதிவு அருமை...
Thanks Viji Parthiban.
Post a Comment