:பாரம்பரிய சிறுதானிய வகைகளில் ' குதிரைவாலி" யும் ஒன்று.இதில் புரதம்,இரும்புச்சத்து,உயிர்ச் சத்துக்கள் அதிகம்.
அளவில்லாத நார்சத்தை சுமந்து இருக்கும் " குதிரைவாலி " ஒரு அற்புதமான தானியம்.
தேவையானவை
குதிரைவாலி
குதிரைவாலி 1 கப்
பயத்தம் பருப்பு 1/4 கப்
மிளகு 15
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
தண்ணீர் 3 கப்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது
-------
செய்முறை:
பயத்தம்பருப்பை தனியே குக்கரில் வேகவைத்து எடுத்துவைக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் ஒரு கப் குதிரைவாலியை
சேர்த்து அடுப்பை ஸ்ம்மில் வைத்து வேகவைக்கவேண்டும்.பத்து நிமிடத்தில் வெந்துவிடும்.(குக்கரிலும் வைக்கலாம்.ஒரு கப்
குதிரைவாலி மூன்று கப் தண்ணீர் வீதம் 3 விசில்)
தனியே வேகவைத்து எடுத்து வைத்த பயத்தம்பருப்பை தேவையான உப்புடன் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும். அல்லது மிளகை அப்படியே பொரித்துப் போடலாம்.
இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.
பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.
கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
தக்காளி சட்னி,தேங்காய் சட்னி இரண்டும் இதற்கு ஏற்ற side dish.
-------------
' குதிரைவாலியில்' இட்லி தோசை செய்யலாம். குதிரைவாலி 3 கப்., உளுந்து 1 கப், வெந்தயம் 1 தேக்கரண்டி.
11 comments:
வித்தியாசமான சுவை அறிம்கப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி
குதிரைவாலி அரிசியில் ஒருர்கம் என்று நினைத்து இருந்தாஎன்.
சிறு தானியமா?
கடையில் கேட்டு வாங்கி செய்துப்பார்த்துவிடுகிறேன்.
நன்றி.
http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
தளம் துள்ளாமல் இருக்க இந்தப் பதிவில் உள்ளது போல் செய்து விட்டீர்களா...?
குதிரைவாலி - எப்போதோ சாப்பிட்டதுண்டு... நல்லதொரு குறிப்பிற்கு நன்றி...
அரிசி வகையில் குதிரைவால் என்றொரு வகை கேள்விப்பட்டிருக்கிறேன். குதிரைவாலி தானியம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இங்கு கிடைத்தால் கட்டாயம் செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.
// கோமதி அரசு said...
குதிரைவாலி அரிசியில் ஒருர்கம் என்று நினைத்து இருந்தாஎன்.
சிறு தானியமா?
கடையில் கேட்டு வாங்கி செய்துப்பார்த்துவிடுகிறேன்.
நன்றி.//
செய்துபாருங்கள்.சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.
//திண்டுக்கல் தனபாலன் said...
குதிரைவாலி - எப்போதோ சாப்பிட்டதுண்டு... நல்லதொரு குறிப்பிற்கு நன்றி...//
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
//கீதமஞ்சரி said...
அரிசி வகையில் குதிரைவால் என்றொரு வகை கேள்விப்பட்டிருக்கிறேன். குதிரைவாலி தானியம் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இங்கு கிடைத்தால் கட்டாயம் செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.//
செய்துபாருங்கள்.சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.
Loved the name... Very new dish to me...
http://recipe-excavator.blogspot.com
குதிரைவாலி ,வரகரிசி,சாமையரிசி தேவையானவர்கள் 9444322538 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். மகேஷ்
Post a Comment