தேவையானவை:
மோர் 2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை 1/2 கப்
எலுமிச்சம்பழம் 1
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
பச்சைமிளகாய்,இஞ்சி,கொத்தமல்லித்தழை மூன்றையும் சிறிது தண்ணீர் தெளித்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு கப் மோரை மிக்சியில் போட்டு நன்றாக விப்பரில் அடித்துக்கொள்ளவேண்டும்.
கடைந்த மோரில் அரைத்த விழுது தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
பெருங்காய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிந்து குடித்தால் தாகம் அடங்கும்.
14 comments:
அடிக்கிற வெயிலுக்கு அவசியமான குறிப்பு. நன்றி.
சூப்பர்... (இரண்டு மாதம்...?) தினமும் தேவை...
நன்றி...
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
நன்றி. திண்டுக்கல் தனபாலன்.
நல்ல அருமையான குளிர்பானம் அக்கா ...அடிக்கிற வெயிலுக்கு ரொம்ப நல்லது ... நான் இன்று கூட இவை அனைத்தும் சேர்த்து தான் மோர் குடித்தோம்... ஆனால் அறத்து சேர்க்க வில்லை ... செய்து விடுகிறேன் அக்கா... குறிப்பிற்கு மிக்க நன்றி...
அரைத்து மோருடன் கலந்து குடித்தால் சுவை அதிகரிக்கும்.வருகைக்கு நன்றி
Viji Parthiban.
அடிக்கிற வெய்யிலுக்கு இதமான பானம்..
கோடைகேற்ற பானம்.
வருகைக்கு நன்றி Aadhi.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
கோடைக்கு ஏற்ற பானம் நீர் மோர் அருமை.
நன்றி.
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
வணக்கம் மேடம்.நான் ஏகாதசி அன்று அரிசி உணவுகள் சாப்பிடுவதில்லை. சோளம், ராகி, கம்பு, கோதுமை போன்றவற்றில் செய்தவற்றை உண்கிறேன். வரகு, குதிரைவாலி, சாமை போன்றவை அரிசி வகைகளா? அல்லது பிற தானியமா? பதில் தர வேண்டுகிறேன்.நன்றி.
-மீரா
வணக்கம் மேடம்.நான் ஏகாதசி அன்று அரிசி உணவுகள் சாப்பிடுவதில்லை. சோளம், ராகி, கம்பு, கோதுமை போன்றவற்றில் செய்தவற்றை உண்கிறேன். வரகு, குதிரைவாலி, சாமை போன்றவை அரிசி வகைகளா? அல்லது பிற தானியமா? பதில் தர வேண்டுகிறேன்.நன்றி.
-மீரா
Post a Comment