Tuesday, June 4, 2013

வாழைத்தண்டு..மாதுளை...சாலட்



தேவையானவை:
வாழைத்தண்டு 1 கப் (பொடியாக நறுக்கியது)
மாதுளம் முத்துகள் 1 கப்
 சிவப்பு திராட்சை 5
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு சிறிதளவு
-----
செய்முறை:

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த வாழைத்தண்டு துண்டுகள்,மாதுளம் முத்துகள், சிவப்பு திராட்சை,மிளகு தூள்,சிறிதளவு உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு  கலக்க வேண்டும். கடைசியில் எலுமிச்சை சாற்றினை பிழியவேண்டும்.
காலை உணவாக இதை சாப்பிடலாம்.உடலில் சர்க்கரையின் அளவையும் சீராக்கும்.

7 comments:

Yaathoramani.blogspot.com said...

வாழைத்தண்டை பயன்படுத்தி
வித்தியாசமாகச் சொன்ன ரெசிபி அருமை
இப்படியென்றால் வாழைத்தண்டைச் சாப்பிட
முரண்டு செய்யும் குழந்தைகளைச் சாப்பிடச்
செய்து விடலாம்,பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி Ramani Sir.

திண்டுக்கல் தனபாலன் said...

மாதுளம் முத்து கடிபடும் போது சுகமாய்த் தான் இருக்கும்... செய்து பார்ப்போம்... நன்றி... tm3

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

இராஜராஜேஸ்வரி said...

உடலில் சர்க்கரையின் அளவையும் சீராக்கும் அருமையான சுவையான குறிப்புகளுக்குப் பாராட்டுக்கள்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...