Thursday, June 20, 2013

கார்ன் ரவை கிச்சடி


தேவையானவை:
                                                           சோள ரவை

சோள ரவை 1 கப்
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
வெங்காயம் 2
தக்காளி 2
பட்டாணி 1/2 கப்
இஞ்சி ஒரு துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லி சிறிதளவு
நெய் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
--------
செய்முறை:

சோள ரவையை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
------
வாணலியில் தேவையான எண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் அதனுடன் தக்காளி,பட்டாணி,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.மஞ்சள் தூள் சேர்க்கவும் தேவையான உப்பு சேர்த்து .வறுத்து வைத்துள்ள சோள ரவையை பரவலாக தூவி நன்கு கிளறவும்.கடைசியில் நெய் ஊற்றி இறக்கவும்.(நெய் அவசியமில்லை)
கொஞ்சம் ஆறின பிறகு எலுமிச்சம்பழத்தை பிழிந்து கொத்தமல்லித்தழையை தூவவும்.

16 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவர்ந்திழுக்கும் வண்ணமே சாப்பிட சொல்கிறது... செய்முறை விளக்கத்திற்கு நன்றி...

Radha rani said...

படத்தில அழகா இருக்கு கிச்சடி.. சாப்பிட தூண்டுது.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

@ Radha Rani

வருகைக்கு நன்றி Radha Rani.

Unknown said...

You have given the recipe for easy to make corn Rawa kichadi Thank you for the sama.

கீதமஞ்சரி said...

கார்ன் ரவை என்பதும் குஸ்குஸ் என்பதும் ஒன்றேதானா வெவ்வேறா காஞ்சனா? கார்ன் ரவை கிச்சடி போல் குஸ்குஸ்ஸையும் செய்யலாமா?

Kanchana Radhakrishnan said...

@ Viya Parthy

Thank you for the comment Viya Parthy.

கோமதி அரசு said...

அருமையான கார்ன் ரவை கிச்சடி.

Kanchana Radhakrishnan said...

@ கீத மஞ்சரி

கார்ன் ரவை என்பதும் couscous ம் வெவ்வேறு. Couscous is a coarsely ground pasta made from semolina, a type of wheat.
கார்ன் ரவையை செய்வது போல் இதையும் உப்புமா,கிச்சடி செய்யலாம்.
வருகைக்கு நன்றி கீதமஞ்சரி.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

ஸாதிகா said...

ஆஹா..அருமையாக இருக்கு.பல ஆணடுகளுக்கு மு பட்லர் ரவா என்ற இந்த கார்ன் ரவா கிடைத்து அருமையாக உப்புமா,கிச்சடி வைத்து சாப்பிட்ட ஞாபகம் வந்து விட்டது.?இப்போது இது எங்கே கிடைக்கிறது?

Kanchana Radhakrishnan said...

கார்ன் ரவா எல்லா provision store லும் கிடைக்கும். வருகைக்கு நன்றி ஸாதிகா.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

Thanks ராமலக்ஷ்மி.

கீதமஞ்சரி said...

விளக்கத்துக்கு நன்றி காஞ்சனா. கார்ன் குஸ்குஸ் (corn couscous) தான் என்னிடம் இருந்தது. நீங்கள் கொடுத்துள்ள செய்முறைப்படி அதில் கிச்சடி செய்தேன். சுவை அருமை. நன்றி காஞ்சனா.

Kanchana Radhakrishnan said...

நன்றி கீத மஞ்சரி,

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...