Monday, October 28, 2013

தீபாவளி ஸ்பெஷல் ..4. தேன்குழல்



தேவையானவை:
 அரிசிமாவு 4 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசிமாவு,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.

முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.
எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.

3 comments:

ராஜி said...

நாங்க பொட்டுக்கடலை மாவு சேர்க்குறதுல்ல.

திண்டுக்கல் தனபாலன் said...

மென்மைக்கு வெண்ணை வேண்டாமா...?

கோமதி அரசு said...

நாலுகப் அரிசி மாவுக்கு 1கப் உளுந்துமாவு ,வெண்ணெய் போட்டு செய்வோம்.
உங்கள் முறைப்படி செய்துப் பார்க்கிறேன்.
நன்றி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...