தேவையானவை:
பொட்டுக்கடலை 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
பொட்டுக்கடலையை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
தேங்காய் துருவலையும் வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொட்டுக்கடலை மாவு,தேங்காய் துருவல்,பொடித்த வெல்லம்,ஏலத்தூள் சேர்த்து வேண்டிய நெய் ஊற்றி சிறிது தண்ணீர் அல்லது பால் தெளித்து உருண்டைகளாக உருட்டவும்.
பொட்டுக்கடலையில் புரோட்டின் சத்து உள்ளது.
14 comments:
தேங்காய் துருவல் சேர்க்காமல் வீட்டில் செய்வதுண்டு...
செய்முறைக்கு நன்றி...
வெல்லம் சேர்த்து இதுவரை செய்ததில்லை... முயற்சிக்கிறேன்.
தீபாவளிக்கான பட்டியலில்
சேர்த்து விட்டேன்
பகிர்வுக்க் வாழ்த்துக்கள்
@ திண்டுக்கல் தனபாலன்.
தேங்காய் துருவல் சேர்க்காமல் பொட்டுக்கடலை மாவுடன் சர்க்கரை சேர்த்து செய்யலாம்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
தேங்காய் சேர்த்து செய்ததில்லை .செய்து பார்க்கிறேன் .
கார்த்திகை தீபத்திற்கு சிவாசியில் எல்லோர் வீடுகளிலும் இந்த லட்டு தான்.
அவர்கள் இதை பொட்டுகடலை உருண்டை என்பார்கள். நாங்கள் சிறுவயதில் வீடு வைத்து விளையாடும் போது ஒவ்வொருவரும் வீட்டிலிருந்தும் ஒருவர் பொட்டுகடலை, ஒருத்தி தேஙாய், ஒருத்தி வெல்லம் கொண்டு வந்து சேர்ந்து கல்லால் உடைத்து செய்து சாப்பிடுவோம். என் மலரும் நினைவுகளை நினைக்க வைத்த லட்டுக்கு நன்றி.
@ Blogger Ramani S
வருகைக்கு நன்றி Ramani Sir.
@ Adhi Venkat
செய்துபாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி ஆதி.
@ அபயாஅருணா
தேங்காய் துருவல் சேர்க்காமல் பொட்டுக்கடலை மாவுடன் சர்க்கரை சேர்த்து செய்யலாம்.வருகைக்கு நன்றி
அபயாஅருணா .
@ Blogger கோமதி அரசு.
உங்கள் நினைவுகளை மலர வைத்தமைக்கு மகிழ்ச்சி.
ரவா லட்டு செய்வோம் இது சற்று புதுமையா இருக்கு செய்து பார்க்கிறோம் நன்றி
செய்துபாருங்கள்.நன்றாக இருக்கும்.வருகைக்கு நன்றி Viya Pathy.
அருமை. சீனியில்தான் செய்வோம். வெல்லத்தில் செய்வது நல்ல ருசியைக் கொடுக்கும். நன்றி.
சீனியை விட வெல்லம் உடம்புக்கு நல்லது.வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம்.வருகைக்கு நன்றி ராமலஷ்மி.
Post a Comment