தேவையானவை:
பச்சரிசி 1 கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
---------
செய்முறை:
அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அரிசி ஊறியபின் தண்ணீரை வடித்துவிட்டு துருவிய தேங்காயுடன் மிக்சியில் நைசாக அரைக்கவேண்டும்.
தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து நான்கு மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
அரைத்த மாவு நீர்க்க இருக்க வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து மாவை ரவா தோசை வார்ப்பது போல் பரவலாக ஊற்றி வார்த்து எடுக்கவேண்டும்.
வெங்காயம் தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை.
6 comments:
வணக்கம்
இலகுவான செய்முறை விளக்கம் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Thanks ரூபன்
வீட்டில் தேங்காயே சேர்க்கவில்லை...! (எனக்காக..)
-..))
அருமையான குறிப்பு. கர்நாடகாவில் இந்தத் தோசை பிரபலமானது.
Today only I saw your comment.Thanks.
Post a Comment