Monday, May 11, 2015

சுரைக்காய் கூட்டு.

தேவையானவை:



சுரைக்காய் 1
கடலைபருப்பு 1/4 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1/4 கப்
பச்சைமிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
நிலக்கடலை 1 டேபிள்ஸ்பூன்
-----
தாளிக்க:
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
----
செய்முறை:


சுரைக்காயை தோலை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கடலைபருப்பை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
-----
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த கடலைபருப்பை சிறிது தண்ணீருடன் சேர்த்து வேகவைக்கவும்..பின்னர் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளை மஞ்சள்தூளுடன் சேர்த்து வேகவிடவும்.
சுரைக்காய் வெந்ததும் தேவையான உப்பு,அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
இறக்கியவுடன் தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சுரைக்காய் கூட்டை சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.
பூரி சப்பாத்திக்கு ஏற்றது.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உடம்பிற்கு சத்தானது...

செய்முறைக்கு நன்றி...

ரூபன் said...

வணக்கம்
இரத்தழுது்தம் உள்ளவர்களுக்கு சிறந்த உணவு
த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்

Thanks திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...


Thanks ரூபன்.

cheese குழிப்பணியாரம்

தேவையானவை: இட்லி மாவு 2 கப் துருவிய சீஸ்  1 கப் எண்ணெய்,உப்பு தேவையானது -------- செய்முறை: அடுப்பில் குழிப்பணியாரக்கல்லை வைத்து ...