தேவையானவை:
பேரீச்சம்பழம் 10
பாதாம் பருப்பு 10
வால்நட் 10
முந்திரிப்பருப்பு 5
பொட்டுக்கடலை 1/4 கப்
ஏலக்காய்த்தூள் 1 தேக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:
பாதாம் பருப்பை நெய்யில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
பேரீச்சம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
பாதாம்பருப்பு,பேரீச்சம்பழத்துண்டுகள்,ஏலக்காய்த்தூள் மூன்றையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
பொட்டுக்கடலை,முந்ததிரிப்பருப்பு இரண்டையும் நெய்யில் வறுத்து வால்நட்டுடன் சேர்த்து பொடிபண்ண வேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாதாம் பேரீச்சம்பழக் கலவை,பொட்டுக்கடலை,முந்திரிப் பொடி இரண்டையும் கலந்து நன்றாக பிசைய வேண்டும்'
தண்ணீர் விட வேண்டாம். பின்னர் உருண்டைகளாக உருட்டவேண்டும்.
இந்த இனிப்பு உருண்டை இரும்புசத்து மிகுந்ததாக இருப்பதால் ரத்த சோகைக்கு நல்லது.
குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
6 comments:
வணக்கம்
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றே செய்து பார்த்து ருசித்து விடுகிறோம்... நன்றி...
சத்து நிறைந்த பண்டம். அருமையான குறிப்பு.நன்றி.
@ ரூபன்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ரூபன்
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்
@ ராமலக்ஷ்மி
Thanks ராமலக்ஷ்மி
Post a Comment