இது நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம்.
மாவுச்சத்து,புரதச்சத்து,வைட்டமின் "B" யும் தாது உப்புக்கள்
பொட்டாசியம்,பாஸ்பரசும் உள்ளது.
நார்ச்சத்து உள்ளதால் இது நம்முடைய அன்றாட உண்வில் பெரும் பங்களிக்கிறது.
சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
தோசைக்கு தேவையானவை:
ஸ்டீல் கட் ஓட்ஸ் 2 கப்
ரவா 1/4 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் 4
மிளகு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது
செய்முறை:
.ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்கவிடவும்.
ஸ்டீல் கட் ஓட்ஸை அதில் போட்டு ஒரு இரவு முழுக்க ஊறவிடவும்.
மற்ற எல்லா பொருட்களையும் 2 மணிநேரம் காலையில் ஊறவைத்தால் போதும்.
முதலில் ஊறிய ஸ்டீல் கட் ஓட்ஸை அரைத்து எடுத்துவைக்கவும்.
பின்னர் மற்றப்பொருட்களையெல்லாம் உப்புடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அதனுடன் அரைத்த ஓட்ஸ் மாவை கலந்து ஒரு சுற்று சுற்றவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போட்டு ஒரு குழிக்கரண்டியால் மாவை நடுவில் ஊற்றி தோசை மாதிரி
வார்க்கவும்.சிறிது எண்ணைய் விட்டு இரண்டுபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவேண்டும்.
side dish வெங்காய சட்னி.
7 comments:
காஞ்சனா ரொம்ப அருமையான சத்தானா தோசை, என் பிளாக்கில் உங்களுக்கு அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுங்கள்.
hello madam.... neenga nalla recipes ellam koduthu engaluku romba help panreenga...im ur regular customer. :-)
athu ennathunga steel cut oats??
nan inga quaker oats than use panren. rendum onna??
thanks fr ur recipes.
" ஸ்டீல் கட் " அப்ப்டின்னா என்னங்க?
நன்றி Jaleela
வருகைக்கு நன்றி Lalitha
அகில் பூங்குன்றன்
Steel Cut Oats என்றே Super Market ல் கிடைக்கும்.
Quaker oats லும் இதை செய்யலாம்.
ஆனால் ஓட்ஸை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்
http://allinalljaleela.blogspot.com/2009/11/blog-post_09.html
இந்த லிங்கில் உள்ள அவார்டை பெற்று கொள்ளுஙகள்
Good. I'll try it
http://snehiti.blogspot.com
Post a Comment