தேவையானவை
கொத்தவரங்காய் 1/4 கிலோ
துவரம்பருப்பு 1/2 கப்
புளி எலுமிச்சை அளவு
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
-----
அரைக்க:
தேங்காய் துருவல் 1 கப்
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 10
------
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
கொத்தவரங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பை மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
---
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்தவுடன் நறுக்கிய கொத்தவரங்காயை போட்டு வேகவைக்கவும்.
காய் நன்கு வெந்தவுடன் தேவையான உப்பையும் வேகவைத்த பருப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் புளியை கெட்டியாக கரைத்து விட்டு அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து சிறிது கெட்டியாக வரும்போது பொடித்த வெல்லம் சேர்த்து இறக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கூட்டுடன் சேர்க்கவும்.
8 comments:
கொத்தவரங்காய் இனிப்பு கூட்டு அருமை..இதில் பொரியல் தான் செய்திருக்கேன்..வெல்லம் போட்டு கூட்டு செய்ததில்லை...
மிகவும் வித்தியசமாக இருக்கின்றது...செய்து பார்க்கிறேன்...நன்றி
pakkum pothe sappadanum pola iruku super nanum seinju pakkaren
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
Menaga.
செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி Geetha.
வருகைக்கு நன்றி பார்கவி.
ரொம்பவும் வித்தியாசமான கூட்டாய் பார்ப்பதற்கும் செய்முறையிலும் தெரிகிறது. அவசியம் செய்து பார்க்க வேண்டும்!
வருகைக்கு நன்றி Mano
Post a Comment