Sunday, December 19, 2010

பூரி...சாகு

பூரி செய்வது எல்லோருக்கும் தெரிந்ததே.

"சாகு" பூரிக்கு உகந்த side dish.

ஹோட்டல்களில் பூரி..சாகு சாப்பிட்டிருப்போம்.

ஆனால் நம்மில் பல பேர் வீட்டில் "சாகு" செய்வதில்லை.

"சாகு" செய்முறையை விளக்குகிறேன்.



தேவையானவை:

காலிஃப்ளவர் 10 பூக்கள்

உருளைக்கிழங்கு 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் 1

பட்டாணி 1/2 கப்

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

கார்ன் 1/2 கப்

கடலைமாவு 1 டேபிள்ஸ்பூன்

vegetable stock 1 கப்

உப்பு எண்ணைய் தேவையானது

----

அரைக்க:

துருவிய தேங்காய் 1 கப்

பட்டை 1 துண்டு

கிராம்பு 2

சீரகம் 1 டீஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

கசகசா 1 டீஸ்பூன்

பச்சைமிளகாய் 2

கொத்தமல்லித்தழை 1/4 கப்

----

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 கொத்து

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

-----

செய்முறை:


வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற காய்கறிகளை ஒரு microwave bowl ல் வைத்து சிறிது உப்பு சேர்த்து microwave "H'ல் ஐந்து நிமிடம் வைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்துவிடும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர் வேகவைத்த காய்கறிகள்,அரைத்த விழுது சேர்க்கவும்.

இதனுடன் vegetable stock அல்லது தண்ணீர் ஒரு கப்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கடலை மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து ஒரு நிமிடம்

கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.

17 comments:

Priya Sreeram said...

hi kanchana--the sagu recipe was swell, u r right, i have eaten that but never prepared at home---bookmarked !

Kanchana Radhakrishnan said...

varkaikku nanri Priya.

ராமலக்ஷ்மி said...

கர்நாடகாவில் சாகுதான் எல்லா உணவு விடுதியிலும். குறிப்புக்கு நன்றி.

Jaleela Kamal said...

பூரி சாகு, சாகு பெயர் எனக்கு தெரியல.
வெஜ் குருமா போல் இதே போல் செய்வேன்.நல்ல இருக்கும்/எங்க வீட்டு கல்யான வீடுகளில் காலை டிபனுக்கு லேசா கொஞ்சமா மட்டனு,ம் சேர்ப்பார்கள்.
ரொம்ப அருமையாக இருக்கு

Asiya Omar said...

அருமை.

Kanchana Radhakrishnan said...

// ராமலக்ஷ்மி said...
கர்நாடகாவில் சாகுதான் எல்லா உணவு விடுதியிலும். குறிப்புக்கு நன்றி//.


நானும் பெங்களுரு ஹோட்டல்களில் சாப்பிட்டு இருக்கிறேன்.சாதாரணமாக உடுப்பி ஹோட்டல்களில் பூரிக்கு "சாகு" தான்.
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela.

முகவை மைந்தன் said...

பூரி சாகு! சன்னாகிதே!!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya.

துளசி கோபால் said...

நானும் ஒரு காலத்துலே சாகு சாப்பிட்டு இருக்கேன். பூரிக்கு உருளை மசாலா தீர்ந்துட்டால் அவசரடியா இந்த சாகு தயார் பண்ணிருவாங்க. அதுலே வெங்காயம் தவிர வேறு காய்கறிகளைப்பார்த்த நினைவில்லையே....

ஒருவேளை அப்போதும் வெங்காயம் 'தங்க'விலையோ என்னவோ!

சாந்தி மாரியப்பன் said...

டேஸ்ட்டியான குறிப்பு.

Kanchana Radhakrishnan said...

நீங்கள் சொல்வதுபோல் வெங்காயம் "தங்க" விலையாக இருந்திருந்தால் "சாகு" வில் வெங்காயத்தை பார்த்திருக்கமுடியாது.!!!
வருகைக்கு நன்றி துளசி கோபால்.

Kanchana Radhakrishnan said...

முகவை மைந்தன் said...
பூரி சாகு! சன்னாகிதே!!//

நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.

Priya dharshini said...

Wow super ah eruku,poori yum sagu yum

Kanchana Radhakrishnan said...

Thanks
Priya's Feast.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...