Wednesday, February 2, 2011

ஆஃப்கான் ரெய்தா



தேவையானவை:

புதினா 1 கப் (ஆய்ந்தது)

கொத்தமல்லித் தழை 1 கப் (ஆய்ந்தது)

பச்சைமிளகாய் 2

தக்காளி 1

வெள்ளரிக்காய் 1

தயிர் 3 கப்

உப்பு தேவையானது

செய்முறை:


வெள்ளரிக்காயை தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

புதினா,கொத்தமல்லித்தழை,பச்சைமிளகாய் மூன்றையும் சிறிது தயிர் விட்டு மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,மீதமுள்ள தயிர்,பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்,

தக்காளி தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

ஆஃப்கான் ரெய்தா ரெடி.
புலவ்,பிரியாணி,மிக்ஸட் ரைஸ் எல்லாவற்றிற்கும் இந்த ரெய்தா ஏற்றது.

9 comments:

Reva said...

Superaaaa irukku.... u have an award waiting for u in my blog... please do collect it... keep rocking ... u deserve a lot more....
Reva

Asiya Omar said...

அருமை.பகிர்வுக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

Thanks Revathi.

Menaga Sathia said...

வித்தியாசமா நல்லாயிருக்கு!!

Kanchana Radhakrishnan said...

Thanks Menaga.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya omar.

Jaleela Kamal said...

ரொமப் நல்ல இருக்கு நான் பொடியாக அரிந்து சேர்ப்பேன்.

ஸாதிகா said...

நான் செய்யும் ரைத்தவில் இருந்து வித்த்யாசமாக உள்ளது.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸாதிகா .

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...