தேவையானவை:
அவல் 1 கப்
தயிர் 1 1/2 கப்
பச்சை திராட்சை 1/2 கப்
மாதுளை முத்துகள் 1/2 கப்
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
உப்பு,எண்ணெய் தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் அவலை தண்ணீர் தெளித்து நன்கு பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அதில் 1 1/2 கப் தயிர் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
அதனுடன் பச்சை திராட்சை,மாதுளமுத்துகள் சேர்க்கவேண்டும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,பெருங்காயத்தூள்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை
தாளித்து ரெடியாக உள்ள அவல் பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.
--------
இதேபோல் ஓட்ஸ் லும் செய்யலாம்.
ஓட்ஸை microwave ல் இரண்டு நிமிடம் வேகவைத்து பின்னர் தயிர் சேர்த்து இதே முறையில் செய்ய வேண்டும்.
10 comments:
அருமையாக உள்ளது.பிரஷண்டேஷன் சூப்பர்.
வருகைக்கு நன்றி ஸாதிகா.
வருகைக்கு நன்றி வலைஞன்.
எளிமையான குறிப்பு. நன்றி காஞ்சனா.
இந்த வெயிலுக்கு அவல் பகாளாபாத் சூப்பரா இருக்கும்..செய்முறையும் சுலபமா இருக்கு.
// விச்சு said...
எளிமையான குறிப்பு. நன்றி காஞ்சனா.//
வருகைக்கு நன்றி விச்சு.
சுவையான அவல் பகாளாபாத். குறிப்புக்கு நன்றி.
சத்துப் பொருட்களான அவல், திராட்சை, மாதுளை பற்றி பகிர்வு மிகவும் அருமை.
எளிய முறையில் "அவல் பகாளாபாத்" superb அக்கா.......
// ராமலக்ஷ்மி said...
சுவையான அவல் பகாளாபாத். குறிப்புக்கு நன்றி.//
வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி
// VijiParthiban said...
சத்துப் பொருட்களான அவல், திராட்சை, மாதுளை பற்றி பகிர்வு மிகவும் அருமை.
எளிய முறையில் "அவல் பகாளாபாத்" superb அக்கா.......//
நன்றி Viji Parthiban
Post a Comment