தேவையானவை:
ரவா 1 கப்
துருவிய தேங்காய் 1/2 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வற்றல் மிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
தயிர் 2 மேசைக்கரண்டி
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:
ரவாவில் சன்னரக ரவாவில் வடை செய்தால் ருசியாக இருக்கும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் ரவாவுடன் தயிர்,உப்பு,சீரகம்,தேங்காய் துருவல் எல்லாவற்றையும் சேர்த்து பிசறிக்கொள்ளவேண்டும்.
தண்ணீர் வேண்டுமென்றால் தெளித்துக்கொள்ளவும்.
இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வற்றல் மிளகாயை மிக்சியில் ஒரு சுற்று சுற்றி
கறிவேப்பிலையையும் சேர்த்து எல்லாவற்றையும் கலந்து கையில் அள்ளித் தட்டும் பதத்துக்கு பிசைந்து கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் வடைகளை தட்டிப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
பிசைந்த மாவை நெடு நேரம் வைத்திருந்தால் மாவு புளித்து விடும். அதனால் பிசைந்த உடனே வடைகளை தட்டவேண்டும்.
10 comments:
சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது படம். செய்திட வேண்டியதுதான்:). குறிப்புக்கு நன்றி.
ரவாவில் வடையா பேஷ் பேஷ்...
வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
// ஸாதிகா said...
ரவாவில் வடையா பேஷ் பேஷ்...//
பாராட்டுக்கு நன்றி ஸாதிகா.
ரவா வடை பார்க்கும் போதே சூப்பர் ....சாப்பிடால் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் ....
என் வலைப்பூவின் உறவினராகா வாருங்கள் அக்கா . நம் நட்பு தொடரட்டும்..........
வருகைக்கு நன்றி VijiParthiban
ரவாவில் வடை.சுலபமா இருக்கே.எண்ணெய் நிறைய எடுக்குமோ இந்த வடை ?
மற்ற வடைகளை விட ரவா வடை கொஞ்சம் எண்ணெய் சற்று இழுக்கும். .வருகைக்கு நன்றி ஹேமா.
கேள்விப்பட்டது கூட இல்லை; செய்து பார்த்தால் போகிறது. recipeக்கு நன்றி.
.வருகைக்கு நன்றி அப்பாதுரை..
Post a Comment