Thursday, October 4, 2012

காரட்..புதினா சூப்




தேவையானவை:

காரட் 5
பால் 1 கப்
புதினா 10 இலைகள்
மிளகு தூள் 1 தேக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி
உப்பு சிறிதளவு
--------
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொதிக்கவிடவும்.

பாலை ஒரு பாத்திரதில் வைத்து பொங்கும் நிலை வருவதற்கு முன்பு அதில் புதினா இலைகளை சேர்த்து மூடி வைக்கவும்.
15 நிமிடம் கழித்து புதினா இலைகளை ஒரு கரண்டியால் எடுத்து விடவும்.

வேகவைத்த காரட்டை தண்ணீருடன்,புதினா சேர்த்த பால்,சிறிது உப்பு எல்லாவற்றையும் ஒரு blender ல் போட்டு அரைக்கவும்.
வேண்டுமென்றால் சிறிது பால் சேர்த்துக்கொள்ளலாம்.

Blender ல் இருந்து எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து கலந்து மேலே மிளகு தூள் தூவவும்.

14 comments:

ராமலக்ஷ்மி said...

வித்தியாசமான சூப். அருமை.

கோமதி அரசு said...

பால் சேர்த்து காரட் சூப் செய்தது இல்லை.செய்து பார்க்க வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இது புதிது... செய்ய சொல்ல வேண்டும்... நன்றி சகோதரி...

virunthu unna vaanga said...

unique one...
Today's Recipe - Mixed Vegetable Kurma
Join in my first event - FEAST FOR YOUR GURU
VIRUNTHU UNNA VAANGA

Kanchana Radhakrishnan said...


// ராமலக்ஷ்மி said...
வித்தியாசமான சூப். அருமை.//


வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Kanchana Radhakrishnan said...

// கோமதி அரசு said...
பால் சேர்த்து காரட் சூப் செய்தது இல்லை.செய்து பார்க்க வேண்டும்.//


வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...


// திண்டுக்கல் தனபாலன் said...
இது புதிது... செய்ய சொல்ல வேண்டும்... நன்றி சகோதரி...//

வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்

ஷைலஜா said...

கேரட் இருக்கு பால் இருக்கு புதினா தான் இல்ல வாங்கிவந்து நாளைக்கு பண்ணிட ப்ளான்..நன்றி காஞ்சனா!

ADHI VENKAT said...

வித்தியாசமான சூப். செய்து பார்க்கலாம்.

Kanchana Radhakrishnan said...

//Vijayalakshmi Dharmaraj said...
unique one...//


வருகைக்கு நன்றி Vijayalakshmi Dharmaraj.

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
Kanchana Radhakrishnan said...

//ஷைலஜா said...
கேரட் இருக்கு பால் இருக்கு புதினா தான் இல்ல வாங்கிவந்து நாளைக்கு பண்ணிட ப்ளான்..நன்றி காஞ்சனா!//


புதினா வாங்கியாச்சா? வருகைக்கு நன்றி ஷைலஜா.

Kanchana Radhakrishnan said...

// கோவை2தில்லி said...
வித்தியாசமான சூப். செய்து பார்க்கலாம்.//



செய்துபாருங்கள்.சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோவை2டெல்லி

Saravanan said...

பயனுள்ள சமையல் குறிப்பு.
அவசியம் செய்து பார்க்கிறேன்.

Tamil Breaking News

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...