Sunday, March 3, 2013

காப்ஸிகம்...வெங்காயம்..பொரியல்




தேவையானவை:
பச்சை குடமிளகாய் 1
சிவப்பு குடமிளகாய் 1
மஞ்சள் குடமிளகாய் 1
வெங்காயம் 2
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி
------
அரைக்க:
தேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
பொட்டுக்கடலை 1 மேசைக்க்கரண்டி
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கறிவேப்பிலை  சிறிதளவு.
--------
செய்முறை:


மூன்று  குட மிளகாய்களையும்,வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பயத்தம்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
ஊறவைத்துள்ள பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து பிரட்டவும்..
பின்னர் நறுக்கி வைத்துள்ள மூன்று குடமிளகாய்களையும் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் எல்லாம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்,பொட்டுக்கடலை பொடியை தூவி கிளற சுவையான குடமிளகாய்..வெங்காயம்...பொரியல் ரெடி.

பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த குட மிளகாய்கள் தான் கிடைப்பதில்லை...

ஸாதிகா said...

கலர் கலர் குடை மி்ளகாய் சேர்த்துக்கலக்கலான பொரியல்.முன்பெல்லாம் சிகப்பு,மஞ்சள் குடைமிளகாய் விலை மிக அதிகமாக இருந்தது.இப்பொழுது 100 150 கிராம் எடைஉள்ள மிளகாய் 10 இல் இருந்து 20 ரூபாய்க்குள்ளே கிடைக்கின்றது.

மாதேவி said...

குடமிளகாய் பொரியல் நன்றாக இருக்கின்றது.

ADHI VENKAT said...

வெறும் குடமிளகாயில் பொரியலா! செய்து பார்க்கலாம்.

கோமதி அரசு said...

எங்கள் ஊரில் பச்சை குடை மிளகாய் தவிர வேறு கலர் கிடைக்காது அதை வைத்து உங்கள் செய்முறையில் செய்து விடுகிறேன்.

Kanchana Radhakrishnan said...

// திண்டுக்கல் தனபாலன் said...
இந்த குட மிளகாய்கள் தான் கிடைப்பதில்லை.

:-))))

Kanchana Radhakrishnan said...

//ஸாதிகா said...
கலர் கலர் குடை மி்ளகாய் சேர்த்துக்கலக்கலான பொரியல்.முன்பெல்லாம் சிகப்பு,மஞ்சள் குடைமிளகாய் விலை மிக அதிகமாக இருந்தது.இப்பொழுது 100 150 கிராம் எடைஉள்ள மிளகாய் 10 இல் இருந்து 20 ரூபாய்க்குள்ளே கிடைக்கின்றது.//


வருகைக்கு நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

// மாதேவி said...
குடமிளகாய் பொரியல் நன்றாக இருக்கின்றது.//

Thanks மாதேவி.

Kanchana Radhakrishnan said...

//
கோவை2தில்லி said...
வெறும் குடமிளகாயில் பொரியலா! செய்து பார்க்கலாம்//

வெங்காயத்தையும் சேர்த்து செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி ஆதி.

Kanchana Radhakrishnan said...

//கோமதி அரசு said...
எங்கள் ஊரில் பச்சை குடை மிளகாய் தவிர வேறு கலர் கிடைக்காது அதை வைத்து உங்கள் செய்முறையில் செய்து விடுகிறேன்.//


செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி

கோமதி அரசு.

கோமதி அரசு said...

நேற்று தான் எங்கள் ஊரில் கலர் குடமிளகாய் கிடைக்காது என்றேன். நேற்று மாலை கடையில் கிடைத்து விட்டது. இன்று எங்கள் வீட்டில் இந்த பொரியல்தான்.
நன்றி.

ராமலக்ஷ்மி said...

இங்கே வண்ண மிளகாய்கள் கிடைக்கின்றன. அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

செய்து பாருங்கள்.வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...