தேவையானவை:
காய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்
பூண்டு 5 பல்
சின்ன வெங்காயம் 10
புளி எலுமிச்சை அளவு
நெய் 1 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணைய் 1/4 கப்
உப்பு தேவையானது
--
மிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டீஸ்பூன்
---
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
வெந்தயம் 1/2 டீஸ்பூன்
சோம்பு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
பெருங்காயம் 1 துண்டு
செய்முறை:
சுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.
---
வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
உரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிளகாய்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.
கடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்
16 comments:
சூப்பர்.. மிகவும் பிடித்த ஐட்டம்...
(சுண்டைக்காய் இவ்வளவு போடணுமா...?)
செய்முறை விளக்கத்திற்கு நன்றி...
எனக்கு மிகவும் பிடித்த அருமையான சுண்டைக்காய் வற்றல் குழம்பு.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
// திண்டுக்கல் தனபாலன் said...
சூப்பர்.. மிகவும் பிடித்த ஐட்டம்...
(சுண்டைக்காய் இவ்வளவு போடணுமா...?)
செய்முறை விளக்கத்திற்கு நன்றி//
நான் கொடுத்துள்ள அளவுகளுக்கு அரை கப் சுண்டைக்காய் வேண்டும்.
வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.
சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்முறை அருமை.
நன்றி.
சூப்பர்.. மிகவும் பிடித்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு.
//வை.கோபாலகிருஷ்ணன் said...
எனக்கு மிகவும் பிடித்த அருமையான சுண்டைக்காய் வற்றல் குழம்பு.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.//
Thanks
வை.கோபாலகிருஷ்ணன் Sir.
வாவ்..அருமை.
// கோமதி அரசு said...
சுண்டைக்காய் வத்தக்குழம்பு செய்முறை அருமை.
நன்றி.//
வருகைக்கு நன்றி கோமதி அரசு.
// VijiParthiban said...
சூப்பர்.. மிகவும் பிடித்த சுண்டைக்காய் வற்றல் குழம்பு.//
Thanks VijiParthiban.
என் மகளுக்கு சுண்டைக்காய் வத்தக்குழம்பு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வாய்க்கும் ஒரு சுண்டைக்காய் வைத்துத் தர வேண்டும் என்பாள்...:)
// ஸாதிகா said...
வாவ்..அருமை.//
வருகைக்கு நன்றி ஸாதிகா.
வருகைக்கு நன்றி Aadhi.
செய்முறை விளக்கம் அருமை. வற்றலுக்காக விற்கப்படும் காய்ந்த சுண்டைக்காயை உபயோகிக்கலாமா?
சுண்டைக்காய் வற்றலை உபயோகிக்கலாம். வற்றலில் ஏற்கனவே உப்பு இருப்பதால் வத்தக்குழம்பில் அரை உப்பு தான் போடவேண்டும்.வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி.
நல்லது. நன்றி.
சுவையான சுண்டைக்காய் குழம்புக்கு பாராட்டுக்கள்..!
வலைச்சர அறிமுகத்துக்கு
வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!!
Post a Comment