Saturday, May 18, 2013

வரகுக் கஞ்சி



 வரகு சிறு தானியங்கள் வகையைச் சேர்ந்தது.
அரிசி கோதுமையைக் காட்டிலும் இதில் நார்சத்து அதிகம்.
புரதம்,கால்சியம்,வைட்டமின் பி ஆகியவை இருக்கின்றன.
காலை உணவுக்கு ஏற்றது.
-------
வரகுக் கஞ்சிக்கு தேவையானது:
                                                                  வரகு

வரகு 1/2 கப்
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு துண்டு
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பால் 1 கப்
உப்பு சிறிதளவு
-----
செய்முறை:
இரண்டு கப் தண்ணீரில் அரை கப் வரகரிசியை சேர்த்து வேகவிடவேண்டும்.
குக்கரில் வைக்கவேண்டாம்.
பாதி வெந்ததும் பூண்டு,இஞ்சி,வெந்தயம்,சீரகம் சேர்த்து வேகவிடவும்.
எல்லாம் சேர்ந்து வெந்ததும் பால்,சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.
-------
பூண்டு,வெந்தயம்,இஞ்சி சீரகம் சேர்க்காமல் வரகரிசி வெந்ததும் பால்,சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயன்தரும் வரகுக் கஞ்சி குறிப்பிற்கு நன்றி சகோதரி...

கோமதி அரசு said...

நல்ல சத்தான கஞ்சி குறிப்பிற்கு நன்றி.

கவியாழி said...

சுவையாய்தான் இருக்கும்.சின்ன வயசுல அம்மா செய்து தருவாங்க ....

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்.

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு.

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

இராஜராஜேஸ்வரி said...

சத்தான வரகுக்கஞ்சி பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

Kanchana Radhakrishnan said...

@ கவியாழி கண்ணதாசன்.

பால்,சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி கவியாழி கண்ணதாசன்.

Kanchana Radhakrishnan said...


@ இராஜராஜேஸ்வரி.

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...