தேவையானவை:
ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
காரட் 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை:
1.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவையை நன்றாக
பொன்னிறமாக வறுக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.
2.வெங்காயத்தையும் காரட்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
2.பின்னர் காரட்,பட்டாணி இரண்டையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறிக் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
---
1.ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
சிறிது உப்பு சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த ரவையை தூவிக்கொண்டே கிளறவும்.
கட்டி தட்டாமல் வந்தவுடன் காய்கறிக் கலவையை சேர்த்து கிளறவும்.
மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊத்தவும்.
ரவை உப்புமா உதிரியாக நன்றாக வரும்.
6 comments:
நன்றாக இருக்கு.எனக்கு ப்படி உதிரியாக வராது.உங்களுடையது நல்லாயிருக்கு!!
Thanks Menaka
அருமையான ரவா உப்புமா
//மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊத்தவும்.
ரவை உப்புமா உதிரியாக நன்றாக வரும். //
சாப்பாட்டு விசயமா!என் கண் உடனே ஓடி வந்து உட்கார்ந்துக்குமே:)
அடைப்பான் நுணுக்கம் இதுவரை தெரியவில்லை.ரவா உப்புமாவுக்கும் உங்களுக்கும் நன்றி.
//Jaleela said...
அருமையான ரவா உப்புமா//
நன்றி Jaleela
வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்
Post a Comment