Sunday, October 25, 2009

ஹைதராபாத் வெஜ் பிரியாணி



தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
தக்காளி 3
எண்ணைய்,உப்பு தேவையானது.
---
இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டேபிள்ஸ்பூன்
காரப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
தயிர் 1/4 கப்
-----
தாளிக்க:
கிராம்பு 4
ஏலக்காய் 2
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
பட்டை 1 துண்டு
பிரிஞ்சி இலை 1
கசகசா 1 டேபிள்ஸ்பூன்
-----

செய்முறை:

* பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் கணக்கில் வைத்து 45 நிமிடம் ஊறவைக்கவும்.
*பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வெங்காயம் நான்கையும் பொடியாக நறுக்கவும்.
*தக்காளியை பொடியாக நறுக்கி எண்ணைய் விட்டு பேஸ்டு போல் செய்துகொள்ளவும்.
---
1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க கொடுத்துள்ள மசாலா சாமான்களை தாளிக்கவும்.
2.அதனுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
3.பின்னர்
நறுக்கிவைத்துள்ள காய்கறிகள்
தக்காளி பேஸ்டு
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள்தூள்,தனியா தூள்,காரப்பொடி
தேவையான உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
4.காய்கறிகள் முக்கால் வெந்தவுடன் தயிர் விட்டு கலந்து அடுப்பை அணைக்கவும்.
5.ஊறவைத்த அரிசியில் காய்கறிக்கலவையைக் கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்கவேண்டும்.
அரிசியும் காய்கறிக்கலவையும் சம சீராக (தண்ணீர் அதிகம் கூடாது) இருக்கவேண்டும்.
6.பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதல் 10 நிமிடம் medium high லும் அடுத்த 10 நிமிடம் medium low விலும்
வைக்கவேண்டும்.

தம் கட்டுதல்:
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதற்குள் பிரியாணி பாத்திரத்தை
10 நிமிடம் வைக்கவேண்டும்.இப்படி செய்தால் பிரியாணி பொல பொல என்று உதிரியாக இருக்கும்.

வெள்ளரிக்காய் ரெய்தா:
வெள்ளரிக்காய் 2; புதினா சிறிதளவு; பச்சைமிளகாய் 4; உப்பு ; தயிர் 1 கப்

வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.தயிர் சேர்க்கவும்.
புதினா,பச்சைமிளகாய்,உப்பு மூன்றையும் பச்சையாக அரைத்து தயிரில் கலக்கவும்.








:

2 comments:

பித்தனின் வாக்கு said...

பிரியானி செய்முறை வித்தியாசமாகவும், படத்தைப் பார்த்தாலே பச்சடியுடன் சாப்பிடத் தோன்றுகின்றது. கண்டிப்பாக இதுபோல் செய்து பார்க்கின்றேன். நன்றி. நீங்கள் பட்டையுடன் ரோஜமொக்கு போடமாட்டீர்களா.

Kanchana Radhakrishnan said...

ரோஜா மொக்கு போடலாம்..ஆனால் அது தனியாக ஏதும் வாசனையைத் தருவதில்லை ..ஆகவே தவித்துள்ளேன்.வருகைக்கு நன்றி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...