Thursday, October 29, 2009

பச்சைமிளகாய் சட்னி

தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

6 comments:

பித்தனின் வாக்கு said...

ஆகா நல்ல காரமான பதிவு. நல்லா இருக்கு. ஆனா எனக்கு அல்சர். அதுனால செய்யலை. நன்றி.

suvaiyaana suvai said...

nalla kaarama irukkum pola
http://susricreations.blogspot.com

ஆனந்தன் said...

என் தாயார் அடிக்கடி செய்யும் உணவு இது,அதுவும் வெண் பொங்கலுக்கு மிகவும் பொருத்தமான பக்க உணவு.ஆமாம் உங்கள் பட்டியலில் புளி எலுமிச்சை அளவு இருக்கிறது,ஆனால் செய் முறையில் புளி வர வில்லையே? விளக்கவும் ப்ளிஸ். நன்றி உங்கள் படைப்புக்கு.

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri piththanin vaakku.

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri suvaiyaana suvai

Kanchana Radhakrishnan said...

சுட்டிகாட்டியமைக்கு நன்றி.பதிவில் இணைத்துவிட்டேன்.வருகைக்கு நன்றி ஆனந்தன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...