தேவையானவை:
புளி நெல்லிக்காய் அளவு
வேப்பம்பூ 1/2 கப் (காய்ந்தது)
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
அரைக்க:
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2
தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
வேப்பம்பூவை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து உப்பு,மஞ்சள்தூள்,பெருங்காயத்தூள்
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
அதனுடன் வறுத்த வேப்பம்பூவை சேர்க்கவேண்டும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை லேசாக எண்ணையில் வறுத்து விழுதாக அரைத்து
சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும்.
நன்றாக கொதித்த பின் கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
வேப்பம்பூ ரசம் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.
2 comments:
வேப்பம்பூ கிடைப்பது அரிதாகி வருகிறது இல்லையாம்மா ??
யாராவது பாக்கெட்டில் அடைத்து விற்றால் நலம்...
சென்னையில் கிடைக்கிறது.வருகைக்கு நன்றி செந்தழல் ரவி
Post a Comment