.
பரங்கித் துண்டுகள் 2 கப்
(மஞ்சள் பூசணி)
புளி எலுமிச்சையளவு
வெங்காயம் 1
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 2
பொடித்த வெல்லம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
-----
செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.
பரங்கித் துண்டுகளை புளித் தண்ணீரில் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
காய் நன்றாக வெந்ததும் வடிகட்டவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் வடிகட்டிய பரங்கித் துண்டுகளை சேர்க்கவும்.
தேங்காய் துருவலையும்,பச்சைமிளகாயையும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றி இதனுடன் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
கடைசியில் பொடித்த வெல்லம் சேர்க்கவேண்டும்.
இறக்கிய பின் கொத்தமல்லித் தழையை தூவவும்.
இது இனிப்பு,புளிப்பு,காரம் மூன்றும் கலந்த சுவையான பொரியல்.
6 comments:
something new to me...in my must try list..thanks for the recipe..
புது ரெசிபி அருமையாக இருக்கு....
varukaikku nanri Menaga.
varukaikku nanri Kadal.
சுவையான பரங்கிக்கறி! என் அம்மா வெல்லத்திற்குப் பதில் சீனியயச் சேர்ப்பார்கள். புகைப்படமும் அழகு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மனோ.
Post a Comment