
பப்பாளியை பலவிதங்களில் சமைக்கலாம்.
பப்பாளி தேங்காய் கறி:
பப்பாளியை தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேபப்பிலை தாளித்து வேகவைத்த பப்பாளித் துண்டுகளை பிரட்டி
தேங்காய் துருவலை சேர்க்கவும்.
பப்பாளி,சன்னா கூட்டு:
பப்பாளியை துண்டுகளாக்கி வேகவைக்கவும்.
ஊறவைத்த கொண்டக்கடலை 1/2 கப்,பயத்தம்பருப்பு 1/4 கப். இரண்டையும் குக்கரில் வேகவைக்கவும்.
தேங்காய் துருவல் 1/2 கப்,மிளகு 5,பச்சைமிளகாய் 3.சீரகம் 1 டீஸ்பூன் அரைத்து வேகவைத்த பப்பாளித்துண்டுகளுடன் சேர்க்கவும்.
குக்கரில் இருந்து கொண்டக்கடலையையும்,பயத்தம்பருப்பையும் இதனுடன் சேர்த்து கொதிக்கவைக்கவும்.தேவையான உப்பு சேர்க்கவும்.
நன்றாக கொதித்தபின் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
பப்பாளி அல்வா:
பப்பாளி பழத்துண்டுகள் 1 கப்,சர்க்கரை 1/2 கப்,நெய் 1/2 கப்.
பப்பாளித் துண்டுகளை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் சர்க்கரையையும் நெய்யையும் சேர்த்து கிளறவெண்டும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கவேண்டும்.
ஏலத்தூள்,வறுத்த முந்திரி சேர்க்கலாம்.
பப்பாளி ஸ்மூதி:
பப்பாளி பழத் துண்டுகள் 1 கப்,வாழைப்பழம் நறுக்கியது 1 கப்,ஆரஞ்சு சாறு 1 கப்,பசலைக்கீரை நறுக்கியது 1/2 கப்,தேன் 1 டேபிள்ஸ்பூன்
பப்பாளி பழத்துண்டுகளுடன் வாழைப்பழம்,பசலைக்கீரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
கடைசியாக ஆரஞ்சு சாற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றிதேன் கலந்து கொடுக்கவும்.
6 comments:
பப்பாளி சமையல் சூப்பர்ப்...விதவிதமாக இருக்கின்றது...அருமை...
விதவிதமான பப்பாளி சமையல் மிக அருமை!!
சூப்பர் ரெசிப்பி.எங்க ஊரில் இது நிறய்யவே கிடைக்கும். நானும் இதில் பொரியல், ரெய்த்தா,கூட்டு எல்லம் செய்வோம். உடம்பிற்க்கு ரொம்ப நல்லது.
வருகைக்கு நன்றி Menaga.
வருகைக்கு நன்றி Viji.
பப்பாளி சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை. அதிலும் பப்பாளி ஸ்மூத்தி மிகவும் வித்தியாசமான சுவையான ஒன்று!!
Post a Comment