Tuesday, August 3, 2010

கடுகு கீரை சப்ஜி (Mustard Greens Sabji)

வட இந்தியாவில் ரொட்டி,நான்,பரோட்டா மூன்றுக்கும் side dish ஆக கடுகு கீரை சப்ஜி பிரபலமானது.
இப்பொழுது சென்னையில் பஞ்சாபி தபா வில் 'Sarson Ka Saag' என்ற பெயரில் கிடைக்கிறது.


கடுகு கீரை:



தேவையானவை:

கடுகு கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
பசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
கடலை மாவு 1 டேபிள்ஸ்பூன்
பனீர் துண்டுகள் 10
வெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடுகு கீரையையும் பசலைக்கீரையையும் நன்றாக அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் அரிந்து கொள்ளவும்.
வெங்காயம்,பூண்டு இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
----
கடுகு கீரையையும்,பசலைக்கீரையையும் தனித்தனியாக Microwave Bowl ல் சிறிது தண்ணீர் தெளித்து வைத்து Microwave oven "H" ல் இரண்டு நிமிடம் வைக்கவும்.
ஆறினவுடன் இரண்டையும் சேர்த்து மிக்சியில் விழுது போல அரைத்துக்கொள்ளவும்,
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி நான்கையும் வதக்கவும்.
இதனுடன்அரைத்து வைத்துள்ள விழுது,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
கடலைமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும்.
பத்து நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்.
இறக்கிய பின் வெண்ணய் மேலே போடவும்.

No comments:

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...