Tuesday, February 15, 2011

அவகோடா( Avocado) சாலட்



தேவையானவை:



தக்காளி 2

Avocado 2

வெங்காயம் 2

வெள்ளரிக்காய் 1

வினிகர் 1 டேபில்ஸ்பூன்

எலுமிச்சம்பழம் 1

ஆலிவ் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

மிளகு தூள் 1 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு



செய்முறை:



Avocado வை குறுக்கு வாட்டில் வெட்டி உள்ளே இருக்கும் கொட்டைகளை எடுத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தக்காளி,வெங்காயம்,வெள்ளரிக்காய் மூன்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நறுக்கிய எல்லாவற்றையும் போட்டு மேலே மிளகுத்தூள்,வினிகர் சேர்த்து Olive oil யை பரவலாக ஊற்றவும்.அதன் மேல்

எலுமிச்சம்பழத்தை சிறு சிறு வட்டமாக நறுக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவும்.

அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிடலாம்.

Avocado ல் நிறைய விட்டமின் சத்துக்கள் உண்டு,எல்லா சூப்ப்ர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்.

8 comments:

பொன் மாலை பொழுது said...

நானும் இந்த அவகாடோ ஒரு பதிவினை இட்டுள்ளேன்
சலாட் பிரமாதம்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி .உங்கள் பதிவை படித்தேன்.

ஸாதிகா said...

வித்தியாசமான சாலட் .பார்க்கவே அருமை

Reva said...

Nallaa irukku akka, suvaiyum pramaathamaa irukkumnu thaeriyuthu...
Reva

ஹேமா said...

நானும் இங்கு அவகாடோ சலாட் செய்துகொள்கிறேன்.ஆனால் இங்கு ஒரு கிவி அல்லது ஒரு துண்டு அன்னாசி சேர்ப்பார்கள்.நீங்களும் சேர்த்துப்பாருங்களேன் !

Kanchana Radhakrishnan said...

// revathi said...
Nallaa irukku akka, suvaiyum pramaathamaa irukkumnu thaeriyuthu...
Reva//

Thanks Reva.

Kanchana Radhakrishnan said...

//ஹேமா said...
நானும் இங்கு அவகாடோ சலாட் செய்துகொள்கிறேன்.ஆனால் இங்கு ஒரு கிவி அல்லது ஒரு துண்டு அன்னாசி சேர்ப்பார்கள்.நீங்களும் சேர்த்துப்பாருங்களேன் ///

அடுத்த முறை செய்யும் பொழுது சேர்க்கிறேன்.வருகைக்கு நன்றி ஹேமா.

Menaga Sathia said...

nice salad!!

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...