Thursday, May 31, 2012

ஆப்பம்




தேங்காய் பால் ஆப்பம்

தேவையானவை:
பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1/2 கப்
உளுந்து 1 தேக்கரண்டி
தேங்காய் பால் 1/2 கப்
சர்க்கரை 1 தேக்கரண்டி
ஆப்பசோடா 1/2 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-------
செய்முறை:


பச்சரிசி,புழுங்கலரிசி,உளுந்து மூன்றையும் மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
வெதுவெதுப்பான வெந்நீரில் சர்க்கரை,ஆப்பசோடா,உப்பு மூன்றையும் கலந்து அரைத்து வைத்த மாவில் கலக்கவும்.
எட்டு மணி நேரம் வைக்கவும்.

ஆப்பம் செய்வதற்கு அரை மணி முன்பு தேங்காய் பாலை சேர்க்கவும்.
ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து மாவை கரண்டியால் நடுவில் ஊற்றி சட்டியை இருபுறமும் பிடித்து சுற்றி விடவேண்டும்
(பார்க்க படம்) மூடியால் மூடி அடுப்பை ஸ்லிம்மில் வைத்து எடுக்கவேண்டும்.திருப்பி போடக்கூடாது.
இதற்கு எண்ணெய் சேர்ப்பதில்லை.
வெஜிடபிள் குருமாவுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.
----------------------------------------------
இளநீர் ஆப்பம்

தேவையானவை:
இட்லி புழுங்கலரிசி 1 கப்
இளநீர் 1 கப்
உப்ப் தேவையானது
தேங்காய் பால் 1/2 கப்
சர்க்கரை 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
----
செய்முறை:
அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து வைக்க வேண்டும்.
அரைத்த மாவில் இளநீர் ஊற்றி கரைத்து வைக்க வேண்டும்.
எட்டு மணி நேரம் கழித்து ஆப்ப மாவு மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும்.
மேலே கூறியபடி ஆப்பம் செய்யவேண்டும்.
தேங்காய் பால்,சர்க்கரை ஏலத்தூள் சேர்த்து ஆப்பத்தில் ஊற்றி சாப்பிடலாம்.

11 comments:

Unknown said...

nandri..aapam suda naan ready

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்புகள். நன்றி.

Kanchana Radhakrishnan said...

// nadi narayanan said...
nandri..aapam suda naan ready//

வருகைக்கு நன்றி nadi narayanan.

ஸாதிகா said...

பட்டுபோல் ஆப்பம்..சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

//ராமலக்ஷ்மி said...
அருமையான குறிப்புகள். நன்றி.//

Thanks ராமலக்ஷ்மி.

சாந்தி மாரியப்பன் said...

பாரம்பரியமான சத்தான உணவு.

தேங்காய்ப்பால் சேர்ப்பதால் வயிற்றுப்புண்ணுக்கும் நல்லது.

Kanchana Radhakrishnan said...

//ஸாதிகா said...
பட்டுபோல் ஆப்பம்..சூப்பர்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

// அமைதிச்சாரல் said...
பாரம்பரியமான சத்தான உணவு.

தேங்காய்ப்பால் சேர்ப்பதால் வயிற்றுப்புண்ணுக்கும் நல்லது.//

ஆம் நீங்கள் சொல்வது போல் தேங்காய்ப்பால் சேர்ப்பதால் வயிற்றுப்புண்ணுக்கும் நல்லது.
வருகைக்கு நன்றி அமைதிச்சாரல்.

Asiya Omar said...

வெள்ளைவெளேர்னு ஆப்பம் பார்க்கவே சூப்பர்.

Kanchana Radhakrishnan said...

.
வருகைக்கு நன்றி Asiya Omar.

Gopi said...

very nice

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...