Monday, May 13, 2013

முருங்கை சூப்




தேவையானவை:

துவரம்பருப்பு 1/2 கப்
முருங்கைக்காய் 2
வெங்காயம் 1
தக்காளி 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
கொத்தமல்லி 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
கார்ன் மாவு 1 மேசைக்கரண்டி
------
பொடி செய்ய:
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
------
செய்முறை:

முருங்கைக்காயை நான்காக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் துவரம்பருப்பு,மஞ்சள்தூள்,வெட்டிய முருங்கைக்காய்,வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் 3 கப் தண்ணீருடன் சேர்த்து
4 விசில் வரும்வரை வைக்கவேண்டும்.

பாத்திரத்திலிருந்து முருங்கைக்காயை எடுத்துவிட்டு மற்றவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டவேண்டும்.
அரைத்ததை ஒரு கடாயில் வைத்து அதனுடன் முருங்கைக்காயின் சதை பாகத்தை உப்புடன் சேர்த்து சிறிது கொதிக்கவைக்கவேண்டும்.
பொடி செய்ய கொடுத்த மிளகு சீரகம் இரண்டையும் வறுத்து இதனுடன் சேர்க்கவேண்டும்.
சூப் தண்ணியாக இருந்தால் கார்ன் மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கலாம்.
கடைசியில் எலுமிச்சம்பழத்தை பிழிய.வேண்டும்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவரை செய்ததில்லை...

நன்றி சகோதரி...

Radha rani said...

முருங்கை கீரையில் பருப்பு சேர்க்காமல் கார்ன் மாவில் சூப் செய்ததுண்டு. உங்கள் செய்முறையை முயற்சிக்கிறேன். பகிர்விற்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்


செய்துபாருங்கள்,சுவையாக இருக்கும்.வருகைக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

கோமதி அரசு said...

முருங்கை சூப் நன்றாக இருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

@ Radha Rani

பருப்பு சேர்ப்பதால் சுவை சற்று அதிகமாக இருக்கும். காலை உணவாகக் கூட எடுத்துக்கொள்ளலாம்.
வருகைக்கு நன்றி Radha Rani.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

VijiParthiban said...

முருங்கை சூப் முயற்சிக்கிறேன்.நன்றாக இருக்கிறது அக்கா...நன்றி...

Mrs.Mano Saminathan said...

பருப்பு சற்று அதிகம் சேர்த்து வித்தியாசமான சூப் செய்முறை நன்றாக இருக்கிறது!

Kanchana Radhakrishnan said...

@ Viji Parthiban

வருகைக்கு நன்றி Viji.

Kanchana Radhakrishnan said...

@ Mano Saminathan

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மனோ.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...