Monday, May 6, 2013

பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்





தேவையானவை:
 பொன்னாங்கண்ணிக் கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தேங்காய் துருவல்1 கப்
பச்சைமிளகாய் 2
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம்1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு1 தேக்கரண்டி
கடலைபருப்பு1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்2
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
-------
செய்முறை:


நறுக்கிய பொன்னாங்கண்ணிக் கீரையை  நன்றாக அலசி வெதுவெதுப்பான நீரில் ஐந்து நிமிடம் வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பொடியாக நறுக்கிய  வெங்காயம்,பச்சைமிளகாயை வதக்கவும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பிழிந்து இதனுடன் சேர்த்து வதக்கவேண்டும். பயத்தம்பருப்பை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து வடிகட்டி இதனுடன் சேர்க்கவும்.தேவையான உப்பையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
கீரை வெந்ததும் சீரகத்தை அப்படியே பச்சையாகவும் மிளகை பொடித்தும் சேர்க்கவும்.
இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
இக்கீரை கண் பார்வைக்கு நல்லது.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுவையான பொன்னாங்கண்ணிக் கீரை பொரியல்... நன்றி...

பொன்னாங்கண்ணிக் கீரை எப்படி செய்தாலும் நன்றாக இருக்கும்...

Kanchana Radhakrishnan said...

நன்றி..திண்டுக்கல் தனபாலன்.

கோமதி அரசு said...

கீரை பொரியல் சுவையோ சுவை.
நன்றி.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. நன்றி.

நாடகம் சிறப்பாக நடந்திருக்கும் என நம்புகிறோம்.

Kanchana Radhakrishnan said...

@ கோமதி அரசு.

வருகைக்கு நன்றி கோமதி அரசு.

Kanchana Radhakrishnan said...

@ ராமலக்ஷ்மி.

நாடகம் நன்றாக நடந்தது.அது குறித்து கேட்டமைக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

@ திண்டுக்கல் தனபாலன்.

வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...