தேவையானவை:
சப்போட்டா பழம் 3
பேரிச்சம்பழம் 4
பால் 1/2 கப்
ஏலக்காய் 2
பனங்கல்கண்டு பொடி 1/2 டீஸ்பூன்
தேன் 1 டீஸ்பூன்
-------
செய்முறை:
பேரிச்சம்பழத்தை உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்துவிட்டு கால் கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
சப்போட்டா பழத்தின் தோலை நீக்கி உள்ளே இருக்கும் விதையை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
-------
ஊறவைத்த பேரிச்சம்பழம் (தண்ணீருடன்) பொடியாக நறுக்கிய சப்போட்டா பழம்,ஏலக்காய்,பனங்கல்கண்டு பொடி எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவேண்டும்.
பின்னர் பாலை சேர்த்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவேண்டும்.
மிக்சியிலிருந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து தேனைக் கலந்து fridge ல் ஒரு மணிநேரம் வைத்து எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும்.
10 comments:
சத்துள்ள பானம்... நன்றி...
வலைத்தளத்திற்கு பதிவை இணைத்த உடனேயே என் தளத்திற்கு வந்து பதில் அளித்தமைக்கு நன்றி.
அருமையான பழத்தில் சுவையான பானம்:)
சத்தான பாணத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
@ ஸாதிகா
Thanks ஸாதிகா.
எளிதில் செய்யக்கூடிய அருமையான பானத்திற்கு செய்முறைக்குறிப்பு தந்திருக்கிறீர்கள் நன்றி
@ ராஜி
வருகைக்கு நன்றி ராஜி.
சத்து மிக்க அருமையான பானம்..!
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.
@ Viya Pathy
வருகைக்கு நன்றி Viya Pathy.
Post a Comment