Sunday, August 10, 2008

பூண்டு காரக்குழம்பு

தேவையானவை:

பூண்டு 20 பல்
புளி ஒரு எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணய் 1/4 கப்
உப்பு தேவையானது
வெல்லம் சிறிதளவு
அரைக்க:-
மிளகாய் வற்றல் 10
மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
தனியா ஒரு டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன்
துவரம்பருப்பு அரைடீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
தேங்காய் துருவல் ஒரு கப்

தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம்,பெருங்காயம்
கறிவேப்பிலை.

செய்முறை:

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு கால் கப் நல்லெண்ணையை விட்டு
நன்கு காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
பின்னர் பூண்டை நன்றாக உரித்து வாணலியில் போட்டு வதக்கவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து விழுதுபோல
அரைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து அரைத்த விழுதோட சேர்த்து வதக்கிய
பூண்டோட சேர்க்கவும்.
அதனுடன் தேவையான உப்பும்,தண்ணீரும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் வெல்லத்தை போட்டு இறக்கவும்.

3 comments:

Nilofer Anbarasu said...

பதிவு ரொம்ப நல்லா இருக்கு.....ருசி எப்படி இருக்குன்னு கண்டிப்பா இந்த வாரம் ரூம்ல செஞ்சு பாக்குறோம்..... செய்முறை விளக்கத்திற்கு ரொம்ப நன்றி.

Kanchana Radhakrishnan said...

செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு எழுதுங்க..வருகைக்கு நன்றி

Anonymous said...

முயற்சி செய்கின்றேன்.. ::)

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...