Saturday, August 23, 2008

வேர்க்கடலை அல்வா

தேவையானவை:

வேர்க்கடலை 2 கப் (வறுத்த வேர்க்கடலை)
வெண்ணைய் கால் கப்
பால் பவுடர் 1 கப்
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 கப்
vennila essence 1 drop
தண்ணீர் 1 கப்

செய்முறை:

வேர்க்கடலை தோலை உரித்துவிட்டு பொடியாக அரைக்கவும்.
பால் பவுடரை தண்ணீரில் கலந்து அதனுடன் பொடியாக்கிய வேர்க்கடலை
சர்க்கரை,வெண்ணைய் மூன்றையும் கலந்து அடுப்பில் வைத்து விடாமல் கிளறவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திக்காக வந்தவுடன் ஏலப்பொடி,வெனிலா எஸன்ஸ் சேர்த்து
கிளறவும்.
ஒரு பெரிய தட்டை எடுத்து அதில் நெய் தடவி வேர்க்கடலை கலவையை ஊற்றி
ஆறினவுடன் வில்லை போடவும்

1 comment:

goma said...

கடலை போடுறதுன்னு சொல்லி கேட்டிருக்கேன்,அல்வா கொடுக்றதும் கேள்விப் பட்டிருக்கேன் .
அது என்ன கடலை அல்வா?
இன்னைக்கே செய்து பார்த்துட்டு சொல்றேன்.கொலஸ்ட்ரால்,சுகர் கொளுப்பு[அது ஏற்கனவே ஜாஸ்தி வீட்லே பெரியவங்க சொல்லுவாங்க]இத்தனையும் பத்திக் கவலை படாமல் சாப்பிட்டு பார்த்து விடுவோம்.
[ஒரே ஒரு கடி கடிக்கலாமா?
எனக்கு அல்வா செய்யவே தெரியாதுன்னு என் ஆத்துக்காரர் சொல்லிட்டே இருப்பார்,ஒரு நாள் செய்து கொடுத்தேன்.......சாப்பிட்டவர், இதுவரை வாயைத் திறக்கலையே!!!!?????]

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...