Tuesday, August 19, 2008

கசகசா குருமா

தேவையானவை:
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
(மூன்றையும் நீளவாக்கில் நறுக்கவும்)
வெங்காயம் 1
தயிர் அரை கப்
உப்பு தேவையானது

அரைக்க:-
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்
பச்சைமிளகாய் 4
கசகசா 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி 6
தேங்காய் துருவல் அரை கப்

தாளிக்க:-
பட்டை,லவங்கம்,ஏலக்காய்,எண்ணைய்

செய்முறை:-

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டுநீட்டவாக்கில் நறுக்கிய காய்கறிகளை
சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக விழுதுபோல் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
எண்ணைய் காயவைத்து பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து அதனுடன்வேகவைத்த காய்கறிகளையும்
உப்பையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
கடைசியில் தயிரை சேர்த்து கிளறி இறக்கவும்.

8 comments:

Anonymous said...

Tirunelveli /south side, parottakku oru chalna vaipparkga. we used to call it as "empty" chalna.

can you post the recipe if you know?

துளசி கோபால் said...

இன்னிக்கு என்ன சமைக்கலாமுன்னு யோசனையா இருந்தது. குருமாவைப் படிச்சதும்,ஆஹா.... இன்னிக்கு இதுதான்'ன்னு முடிவு பண்ணிட்டேன்.

செஞ்சுருவோம்:-)))

Kanchana Radhakrishnan said...

செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று பின்னூட்டம் இடுங்கள் துளசி கோபால்

துளசி கோபால் said...

செஞ்சு பார்த்தாச்சு.

சின்னச் சின்ன மாறுதல்கள் செஞ்சேன். என்னாலே எந்த ஒரு ரெஸிபியையும் அப்படியே ஃபெயித்ஃபுல்லா ஃபாலோ செய்ய முடியாது, அது என்னோட சொந்த ரெஸிபியா இருந்தாலுமே:-))))

தயிர் சேர்க்கலை. மூணு தக்காளி சேர்த்தேன். மங்கள் குருமா மசாலா ரெண்டு டீஸ்பூன்.

முருங்கைக்காய், சேனைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு இவைகளே காய்கள்.

நல்லாத்தான் இருந்தது சப்பாத்திக்கு.

இவர் ஒன்னும் சொல்லாமச் சாப்புட்டார்(வழக்கம்போல)

Kanchana Radhakrishnan said...

ஆஹா..நான் அங்கே இருந்திருந்தா வந்திருப்பேனே..
நன்றி துளசி

துளசி கோபால் said...

ஏங்க காஞ்சனா,

சமையல் குறிப்பு சொல்லிட்டு எதாவது முக்கியமான சின்ன விசயங்களையும் சொல்லணுமா இல்லையா?

கசகசாவை மிக்ஸியில் அரைக்கும்போது தேங்காயோடு சேர்த்துட்டாச் சரியா அரைபடாது.
அதனாலே முதல்லே கசகசாவைமட்டும் தனியா, தண்ணீர் விடாம அரைச்சுட்டு அப்புறம் முந்திரியைச் சேர்த்து அரைச்சுட்டுக் கொஞ்சம் கொஞ்சமாத் தேங்காய் சேர்த்து அரைச்சால் நல்லா மையா அரைபடும்.

மங்களூர் சிவா said...

ச்ச ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி எதோ 'கசமுசா'ன்னு எழுதிருக்கார்னு ஆசையா வந்தா லேடீஸ் ஸ்பெசலா இருக்கு

:)))

Kanchana Radhakrishnan said...

//ச்ச ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி எதோ 'கசமுசா'ன்னு எழுதிருக்கார்னு ஆசையா வந்தா லேடீஸ் ஸ்பெசலா இருக்கு

:)))//
சிவா தம்பி தமிழா..தமிழா வலைப்பக்கமும்,பாரதியார் வலைப்பக்கமும் அண்ணனுடையது.
மிராஸ் கிட்சன்..நம்ம வீட்டு தங்கமணியோடது.ஆனால் எல்லாமே தங்கமணி பெயர்ல தான் இருக்கும்.
விஷயம் அம்புட்டுத்தான்.புரிஞ்சுதா?

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...