Friday, August 15, 2008

அவியல்

தேவையானவை:
கீழ்கண்ட காய்கறிகளை நீட்டவாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கவேண்டும்

1.சேனைக்கிழங்கு 1 கப்
2.காராமணி 1 கப்
3.கத்திரிக்காய் 1கப்
4.முருங்கைக்காய் 1 கப்
5.காரட் 1 கப்
6.வாழைக்காய் 1 கப்
7.கறிவேப்பிலை ஒரு கொத்து
8.தயிர் 1 கப்

அரைக்க:
தேங்காய் 1 கப் (துறுவியது)
பச்சைமிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு கடாய் எடுத்துக்கொண்டு தேங்காயெண்ணையில் சீரகம் கறுவேப்பிலை
தாளிக்கவும்.
பின்னர் காய்கறிகளை வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம்
அரைத்து வைத்த விழுதை போட்டு வதக்கவும்.
பச்சை வாசனை போனபின் தயிரை விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்

2 comments:

பரிசல்காரன் said...

க்கா..

தலைப்பைப் பார்த்து பயந்துட்டேன்!

உமாகிட்ட காட்டறேன் உங்க வலைப்பூவை..

ரொம்ப ரசிப்பாங்க!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கிருஷ்ணகுமார்..உமா கிட்ட வலைப்பூவை காட்டினால் மட்டும் போதாது..அவங்களையும் எழுதச்சொல்லுங்க

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...