Wednesday, October 14, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாக்


தேவையானவை:

கடலைமாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1 1/2 கப்
நெய் 1 கப்
பால் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடலை மாவு,பொடித்த சர்க்கரை,நெய் மூன்றையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் நன்கு கலந்து கீழ்கண்டவாறு வைக்கவும்.

மைக்ரோவேவ் "High" ல் 2 1/2 நிமிடம் வைக்கவேண்டும்.
முதலில் 30 செகண்டு வைத்துவிட்டு எடுத்து கிளறி மீண்டும் 30 செகண்டு வைத்து கிளறி
மீண்டும் இது மாதிரி மொத்தம் 5 தடவை செய்யவேண்டும்.(அதாவது 2 1/2 நிமிடம்).
----
பின்னர் பாலை விட்டு கலந்து
"High" ல் மீண்டும் 2 1/2 நிமிடம் மேற்கூறியவாறு 30 செகண்டுக்கு ஒரு தடவை எடுத்து கிளறி
வைக்கவேண்டும். (5 தடவை).
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
ஒரு தட்டில் நெய் தடவி மைசூர் பாக் கலவையை கொட்டி வேண்டிய வடிவத்தில்
கட் பண்ணிக்கொள்ளவும்.

10 comments:

தேவன் மாயம் said...

பார்த்தாலே நாவூறுதே!!!

தேவன் மாயம் said...

ரொம்ப ஈஸியா இருக்கே!!!நம்ம வீட்டில் ஒரு ஓவன் தூங்குது

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தேவன்மாயம் Sir

வடுவூர் குமார் said...

நெய் ரொம்ப கம்மியாக இருக்கே!! -மனைவியின் கமெண்ட்.

Kanchana Radhakrishnan said...

நெய்,சர்க்கரை இரண்டுமே குறைவாக உபயோகிக்க வேண்டும் என்பதலாயே மைக்ரோவேவில் செய்யப்படுகிறது.இந்த அளவு போதும்.வருகைக்கு நன்றி வடுவூர் குமார்

சகாதேவன் said...

எங்க ஊர்லே சாந்தி ஸ்வீட்ஸில் மைசூர்பா கிலோ 65 ரூபாய்தான். ஊருக்கு போனதும் எனக்கு மைக்ரோ வேவ் வாங்கித் தரச் சொல்றா தாமரை. அது என்ன விலை?

Kanchana Radhakrishnan said...

மைக்ரோவேவ் வீட்டில் இருந்தால் ஓ.கே., இல்லவிட்டால் 65 ரூபாய்க்கே வாங்கிக் கொள்ளலாம்.
வருகைக்கு நன்றி சகாதேவன்

செல்வன் said...

பயனுள்ள சுவையான உணவு செய் முறைகளுக்கு மிகவும் நன்றி.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி செல்வன்

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...