Monday, November 9, 2009

அவசர ரசம் (மைக்ரோவேவ் சமையல்)

ரச பேஸ்டுக்கு தேவையானவை:

மிளகு 4 டீஸ்பூன்
சீரகம் 4 டீஸ்பூன்
தனியா 5 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 10
புளி 2 எலுமிச்சை பழ அளவு

வாணலியில் சிறிது எண்ணை விட்டு மிளகு,சீரகம்,தனியா,மிளகாய்வற்றல் நான்கையும் நன்கு வறுத்துக்கொள்ளவும்.
புளியை கோதில்லாமல் எடுத்து எண்ணைய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் பேஸ்டு போல அரைத்து ஒரு டப்பாவில் போட்டு
fridge ல் வைக்கவும்.இந்த பேஸ்டு பத்து நாள் கெடாமல் இருக்கும்.

ஒரு டேபிள்ஸ்பூன் பேஸ்டுக்கு தேவையானவை:

தக்காளி 2
பெருங்காயம் சிறு துண்டு
தண்ணீர் 3 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு

தாளிக்க:

கடுகு 1டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2

செய்முறை:

மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் பேஸ்ட் யை 3 கப் தண்ணீரில்
தக்காளி,உப்பு.பெருங்காயம் சேர்த்து மைக்ரோவேவ் 'high' ல் 5 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
பின்னர் எடுத்து நன்கு கிளறி மீண்டும் 'high' ல் 5 நிமிடம் வைத்து கொதிக்கவைக்கவும்.

வெளியே எடுத்து வேண்டுமென்றால் அரை கப் தண்ணீர் சேர்க்கலாம்.
பின்னர் தாளிக்கவேண்டியவைகளை தாளித்து கொத்தமல்லித்தழை தூவவேண்டும்.

6 comments:

கோவி.கண்ணன் said...

//"அவசர ரசம் (மைக்ரோவேவ் சமையல்)"//

அவரசம் ! என்று தலைப்பிட்டு இருக்கலாம்
:)

Kanchana Radhakrishnan said...

நன்றி கோவி

துளசி கோபால் said...

உங்க ஊர் க்ராண்ட் ஸ்வீட்ஸ்லே கிடைக்கும் ரசம் பேஸ்ட் அட்டகாசமா இருக்கு.

அவசரம்தான் எனக்கு எப்போதும்:-)))))))

Kanchana Radhakrishnan said...

நன்றி TamilNenjam

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி துளசி கோபால்

Uma Madhavan said...

very useful

http://snehiti.blogspot.com

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...