Wednesday, November 11, 2009

வாழைத்தண்டு மோர்கூட்டு


தேவையானவை:

வாழைத்தண்டு 1
கெட்டி மோர் 1 கப்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
----
அரைக்க:
சீரகம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
தேங்காய் துருவல் 1/2 கப்
----
தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
தேங்காயெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை,நார் நீக்கி சுத்தம் செய்து (கருக்காமல் இருக்க) சிறிது மோர் கலந்த நீரில்
சிறு சிறு துண்டுகளாக நறுக்கிப்போடவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து வாழைத்தண்டை பிழிந்து அரை கப் தண்ணீர் உப்பு,பெருங்காயம்
சேர்த்து வேகவைக்கவும்.முக்கால் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் வேகவைக்கவும்
கடைசியில் ஒரு கப் மோர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
தண்ணியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை சிறிது தண்ணீரில் கரைத்து விட்டு கொதிக்கவிடவும்.

தேங்காயெண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிக்கவும்.

6 comments:

GEETHA ACHAL said...

வாழைத்தண்டு மோர்கூட்டு சூப்பராக இருக்கின்றது.

எனக்கு இங்கு வாழைத்தண்டு கிடைக்காது..இந்தியா வரும் பொழுது அம்மாவிடம் சொல்லி செய்து சாப்பிட வேண்டியது தான்.நன்றி.

Esha Tips said...

அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...

http://tamilparks.50webs.com

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு உங்க குறிப்பு.நானும் இதேமுறையில் தான் செய்வேன்.ஆனா தே.எண்ணெயில் தாளித்ததில்லை.

Kanchana Radhakrishnan said...

நன்றி Geetha

Kanchana Radhakrishnan said...

நன்றி தமிழ் பூக்கள்

Kanchana Radhakrishnan said...

தேங்காயெண்ணையில் தாளித்தால் மணக்கும்.நன்றி மேனகா

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...