Sunday, February 14, 2010

குடமிளகாய் உசிலி


தேவையானவை:

குடமிளகாய் 2
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
---
தாளிக்க:
கடுகு,உளுத்தம்பருப்பு சிறிதளவு

செய்முறை:

குடமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
துவரம்பருப்பு,கடலைபருப்பு,மிளகாய்வற்றல்,பெருங்காயம் நான்கையும் ஒரு மணிநேரம் தண்ணீரில்
ஊறவைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த விழுதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 15 நிமிடம் வேகவைக்கவும்.
ஆவியில் வேகவைத்த பருப்புகளை நன்கு உதிர்க்கவும்.(மிக்சியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரியாக வரும்)

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து
குடமிளகாய்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
குடமிளகாய் வதங்கினவுடன் உதிர்த்த பருப்புகளை சேர்த்து சிறிது எண்ணைய் விட்டு நன்றாக கிளறவும்.
உதிரி உதிரியாக வரும்.

6 comments:

Ananya Mahadevan said...

நல்ல ஒரு ஐடியா, புதிதா இருக்கும். நன்றி!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
அநன்யா மஹாதேவன்

பூங்குழலி said...

நாலு குடை மிளகாயை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் .நன்றி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி பூங்குழலி

Jerry Eshananda said...

உசிலி பெயர் நல்லாயிருக்கே, எங்க உசிலம்பட்டி பக்கம் வந்து கண்டு புடிசீகளோ.

Kanchana Radhakrishnan said...

//ஜெரி ஈசானந்தா. said...
உசிலி பெயர் நல்லாயிருக்கே, எங்க உசிலம்பட்டி பக்கம் வந்து கண்டு புடிசீகளோ.//
உசிலம்பட்டி என்பது உசிலை..உசிலி என்பது பருப்பு கொண்டு செய்யப்படும் ஒரு குறிப்பு.
வருகைக்கு நன்றி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...