Monday, April 30, 2012

சௌ சௌ -பச்சபயறு பொரியல்




தேவையானவை:
 சௌ சௌ 1
பச்சபயறு 1 கப் (முளைகட்டியது)
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது

பொடி செய்ய:
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
நிலக்கடலை 5
flax seeds 1 மேசைக்கரண்டி
எள் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
----------

சௌ சௌ தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சபயற்றை எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு மெல்லிய ஈரத்துணியால் மூடினால் இரண்டு நாளில் முளைகட்டி விடும்.
முடியாவிட்டால் முளைகட்டிய பச்சபயறு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
-------
சௌ சௌ ஐ Microwave bowl ல் வைத்து ' H' ல் இரண்டு நிமிடம் வைத்து எடுத்தால் வெந்துவிடும்.
தேவையான உப்பு சேர்த்து மீண்டும் அரை  நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
முளைகட்டிய பயற்றை அதே போல இரண்டு நிமிடம் வைத்து விட்டு மீண்டும் தேவையான உப்பு சேர்த்து அரை நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
-----
பொடி செய்ய வேண்டியவைகளை எண்ணயில்லாமல் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
flax seed (rich in Omega-3 fatty acids) எள் இரண்டையும் நாம் தின சமையலில் சேர்ப்பதில்லை.அதனால் பொரியலில் சேர்த்திருக்கிறேன்.
-----
வாணலியில் எண்ணய் வைத்து தாளிக்க வேண்டியவைகள தாளித்து ரெடியாக உள்ள சௌ சௌ,முளைகட்டிய பச்ச பயறு இரண்டையும் சேர்த்து கிளறவேண்டும்.
தயாராக வைத்துள்ள பொடியை சேர்த்து இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவேண்டு

22 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

சௌ சௌ இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய் என்று எங்கள் வீட்டுப்பெரியவர்கள் சொல்லுவார்கள். எங்கள் வீட்டில் இதயம் என்றே இந்த காயை அழைப்போம். சத்து மிகுந்த சௌ சௌவில் நல்லதொரு சமையல் குறிப்பு சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி மீரா.

ஸாதிகா said...

நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.

ஸாதிகா said...

நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.

ஸாதிகா said...

நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.

Radha rani said...

சௌ சௌ பாசிப்பயறு சேர்த்து செய்திருக்கிறேன்.பொடி சேர்த்து பயறை முளைக்கட்டி செய்ததில்லை.அடுத்து இதுபோல் செய்ய வேண்டும்.நல்லா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

//Collapse comments
1 – 5 of 5
புவனேஸ்வரி ராமநாதன் said...
சௌ சௌ இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய் என்று எங்கள் வீட்டுப்பெரியவர்கள் சொல்லுவார்கள். எங்கள் வீட்டில் இதயம் என்றே இந்த காயை அழைப்போம். சத்து மிகுந்த சௌ சௌவில் நல்லதொரு சமையல் குறிப்பு சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி மீரா.//



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புவனேஸ்வரி..

Kanchana Radhakrishnan said...

// ஸாதிகா said...
நன்ராக உள்ளது.அவசியம் சமித்துப்பார்க்கவேண்டும்.//


பொடியை போட்டு செய்து பாருங்கள்/மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி ஸாதிகா.

Aruna Manikandan said...

healthy and delicious combo :)

Kanchana Radhakrishnan said...

// ராதா ராணி said...
சௌ சௌ பாசிப்பயறு சேர்த்து செய்திருக்கிறேன்.பொடி சேர்த்து பயறை முளைக்கட்டி செய்ததில்லை.அடுத்து இதுபோல் செய்ய வேண்டும்.நல்லா இருக்கு.//

செய்து பாருங்கள்/மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி
ராதா ராணி..

கோமதி அரசு said...

செள செள பச்சைபயறு பொரியல் இந்த மாதிரிசெய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.

நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

சாந்தி மாரியப்பன் said...

கடலைப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு செஞ்சதுண்டு,.. பொரியல் இப்பத்தான் பார்க்கிறேன். செஞ்சுர வேண்டியதுதான்..

Kanchana Radhakrishnan said...

Aruna Manikandan said...
healthy and delicious combo :)//

Thanks Aruna.

Kanchana Radhakrishnan said...

//கோமதி அரசு said...
செள செள பச்சைபயறு பொரியல் இந்த மாதிரிசெய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.

நன்றி.//


பொடியை போட்டு செய்து பாருங்கள்/ ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி கோமதி அரசு.

ADHI VENKAT said...

செளசெளவை சாம்பாரில் போட்டிருக்கிறேன். கூட்டும் செய்வேன். இது போல் செய்ததில்லை. அவசியம் செய்து பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.

Kanchana Radhakrishnan said...

//இராஜராஜேஸ்வரி said...
சுவையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//


.வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

Jaleela Kamal said...

சௌ சௌ பொரியல் பச்ச பயறுடன் கலக்கல்,
நான் பீட்ரூட், கேரட்டுடன் செய்வேன்

savitha said...

நிலகடலைக்கு தனி சுவை உண்டு அதனுடன் எள்ளு சேர்ந்தால் இன்னும் ருசியாக இருக்கும்.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

//y 1, 2012 4:43 AM
Jaleela Kamal said...
சௌ சௌ பொரியல் பச்ச பயறுடன் கலக்கல்,
நான் பீட்ரூட், கேரட்டுடன் செய்வேன்.//


வருகைக்கு நன்றி Jaleela.

Kanchana Radhakrishnan said...

//
savitha said...
நிலகடலைக்கு தனி சுவை உண்டு அதனுடன் எள்ளு சேர்ந்தால் இன்னும் ருசியாக இருக்கும்.கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் //


செய்து பாருங்கள்/மிகவும் ருசியாக இருக்கும்.வருகைக்கு நன்றி Savitha.

ஹேமா said...

உண்மையாவே சௌ சௌ தெரியேல்ல அன்ரி !

Kanchana Radhakrishnan said...

சௌ சௌ ஐ பெங்களூர் கத்திரிக்காய் என்றும் கூறுவார்கள்.வருகைக்கு நன்றி ஹேமா..

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...