தேவையானவை:
வெள்ளை பூசணி 1 துண்டு
தயிர் 1 கப்
இஞ்சி 1 சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 2
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
பூசணித்துண்டையும்,இஞ்சியையும் துருவிக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் தயிரை சேர்த்து அதனுடன் துருவிய பூசணி,துருவிய இஞ்சி,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவேண்டும்.
வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,சீரகம்,மிளகாய் வற்றல்.கறிவேப்பிலை தாளிக்கவும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இந்த பச்சடி இரத்தக்கொதிப்புக்கும்,தலைசுற்றலுக்கும் நல்லது.
11 comments:
எனக்கு மிகவும் பிடித்தது...
பச்சிடி போல் செய்வது புதிது...
நன்றி...
பூசணி பச்சடியா? இதுவரை கேள்விப்படாத பச்சடி. செய்முறைக்கு நன்றி காஞ்சனா.
செய்து பார்க்க ஆசையாக உள்ளது. இப்போ நான் பூசணிக்கு எங்கே போவேன்? :(
புதுமாதிரியான பச்சடியாய் இருக்கிறது
அவசியம் செய்துபார்த்துவிடுகிறோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
@ திண்டுக்கல் தனபாலன்.
வருகைக்கு நன்றி
திண்டுக்கல் தனபாலன்
@ கீத மஞ்சரி
வருகைக்கு நன்றி கீத மஞ்சரி.
பூசணி பச்சடி செய்து பார்க்கிறேன் அக்கா.பகிர்வுக்கு நன்றி...
@ Ramani S
வருகைக்கு நன்றி Ramani Sir.
செய்வதுண்டு. குறிப்பு அருமை.
@ Viji Parthiban
வருகைக்கு நன்றி Viji.
@ ராமலக்ஷ்மி
வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி.
Post a Comment