Tuesday, July 22, 2008

தெரக்கல் (side dish

)

தேவையானவை

கத்திரிக்காய் 3
உருளைக்கிழங்கு 2
தக்காளி 2
வெங்காயம் 2

அரைக்க:
பச்சைமிளகாய் 3
காய்ந்த மிளகாய் 3
சீரகம் 1 டீஸ்பூன்
தேங்காய் 1 கப் துருவியது
முந்திரிபருப்பு 2
பொட்டுக்கடலை 3 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்

தாளிக்க:
சோம்பு 1/2 டீஸ்பூன்
மிளகு 10
பட்டை சிறிய துண்டு
எண்ணய் தேவையானது

செய்முறை:

கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு,வெங்காயம் மூன்றையும்
பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணைய்விட்டு
வதக்கி பேஸ்டு போல் பண்ணவும்.
அரைக்கக்கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைக்கவும்.

ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் எண்ணய் விட்டு
தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பின்னர் பொடியாக நறுக்கிய
வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
கத்திரிக்காய்,உருளைக்கிழங்கு போட்டு வதக்கி உப்பு சேர்க்கவும்.
தக்காளி பேஸ்டு சேர்க்கவும்.
பின்னர் அரைத்த விழுதையும் போட்டு கிளறி 4 கப் தண்ணீர் விட்டு
நன்கு கொதிக்கவைக்கவும்

இது செட்டிநாட்டில் பிரபலமான side dish..

2 comments:

சதங்கா (Sathanga) said...

எளிமையா விளக்கியிருக்கீங்க அருமை.

ஆனால், முந்திரிபருப்பு, பொட்டுக்கடலை, மிளகு, பட்டை இதெல்லாம் சேர்ப்பதில்லையே !

இன்னும் சிம்ளிஃபைட் வெர்ஸன் :

வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி போட்டு, நல்லா பேஸ்ட் ஆகும்போது, மிளகாய் பொடி, உப்பு போட்டு, கொஞ்சம் நீர் விட்டு தெரக்கி, கொதி வந்தவுடன் .... இட்லியோ, தோசையோ ஊத்தி களேபரம் பண்ணலாம் :))

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...